Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினம் தினம் திருநாளே! புரட்டாசி 3, ராசிபலன்

 

 



 

 

இந்த நாள் இனிய நாள்

19.9.16 திங்கட்கிழமை

ராசி பலன்

'ஜோதிட மாமணி' முருகப்ரியன்

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.தசா புக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு தொலைந்த பொருள் கிடைப்பது, மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாலைவேளையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

பரிகாரம்: கந்த சஷ்டி பாராயணம் செய்வது நல்லது.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

பரிகாரம்: இன்று நீங்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

மிதுனம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.

பரிகாரம்: துர்கையை வழிபடுவது நன்மை தரும்.

கடகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும்.

பரிகாரம்: அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

சிம்மம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பொறுமையுடன் இருக்கவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

கன்னி:  வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். : மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள்  உங்களுக்குச் சாதகமாக முடியும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களை சமர்ப்பித்து வழிபடவும்.

துலாம்: அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

விருச்சிகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதும், அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் நலம் தரும்.

தனுசு: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்:  தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.

மகரம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.  வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதும், சிவ ஸ்துதிகளை பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

கும்பம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். சிலரால் மனதில் சிறு வருத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடவும்.

 

மீனம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

பரிகாரம்:  பெருமாளை வழிபடுவதும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.


 

 




 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ