Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 4, ராசிபலன்

'ஜோதிட மாமணி' முருகப்ரியன்

மேஷம்:

           முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
 
பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்து விநாயகரை வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்:

       இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பரிகாரம்:.சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

மிதுனம்:

      இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால்,  பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால்,  வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

பரிகாரம்:  தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.

கடகம்:

       இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
பரிகாரம்: அம்பிகையை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

சிம்மம்:

       இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடவும்.

கன்னி:

     இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். கோர்ட் வழக்கு தள்ளிப்போகும். தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களால் நல்ல திருப்பம் ஏற்படும். இன்று சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

 பரிகாரம்:  தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

துலாம்:

       காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு தொண்டையில் சிறு உபாதை ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும்.

பரிகாரம்: கந்த சஷ்டி பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபடவும்.

விருச்சிகம்:

    அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

பரிகாரம்: இன்று நீங்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட கூடுதல் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
     அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும்.

பரிகாரம்: துர்கையை வழிபடுவது நன்மை தரும்.

மகரம்:

    அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் ஒரு சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும்.

பரிகாரம்: அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

கும்பம்:

     காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் உடல் நலன் பாதிக்கப்படும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும்.

 பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட சிரமங்கள் குறையும்.

மீனம்:
            வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.  மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள்  உங்களுக்குச் சாதகமாக முடியும்.

பரிகாரம்: நெய்தீபம் ஏற்றி துர்கையை வழிபட நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

எடிட்டர் சாய்ஸ்