Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள்... இனிய நாள்... புரட்டாசி 5, ராசிபலன்

மேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது மிகவும் அவசியம். சிறிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள்.

பரிகாரம்: விநாயகரை அறுகம்புல்லால் அர்ச்சித்து வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

பரிகாரம்: அம்பிகையை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

கடகம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.மாலையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். மனதில் இனம் தெரியாத கலக்கம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

கன்னி: முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்டநாட்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

துலாம்: காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள், இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சற்று பொறுமையுடன் நடந்துகொள்வது சிரமத்தைக் குறைக்கும்.

பரிகாரம்: மகான்களின் அதிஷ்டானத்துக்கோ பிருந்தாவனத்துக்கோ சென்று வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். உங்களுடைய அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை தரும்

மகரம்: காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். சிறு விபத்து ஏற்படும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்லவும். பிற்பகலுக்குமேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

பரிகாரம்: துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் கூடும்.

கும்பம்: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில்  சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

மீனம்: இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்கு சாப்பிடக்கூட  முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ