Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 7, ராசி பலன்

 

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

பரிகாரம்: இன்று நீங்கள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை..

பரிகாரம்: சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபடுவது நலம் சேர்க்கும்

மிதுனம்: வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். : மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள்  உங்களுக்குச் சாதகமாக முடியும்.

பரிகாரம்: துர்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கடகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

பரிகாரம்: சூரிய வழிபாடு நன்மை தரும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.

சிம்மம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.  வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். சிலரால் மனதில் சிறு வருத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிரமங்களைக் குறைக்கும்.

துலாம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.

பரிகாரம்: விநாயகரை அறுகம்புல் மாலை அணிவித்து வழிபட நலம் தரும்.

விருச்சிகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பொறுமையுடன் இருக்கவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.தசா புக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு தொலைந்த பொருள் கிடைப்பது, மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாலைவேளையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நலம் சேர்க்கும்.

மகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்

கும்பம்: அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பரிகாரம்: நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபடவும்.

மீனம்:  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதும், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நல்லது.

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ