Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 8, ராசி பலன்

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

பரிகாரம்: விநாயகரையும் துர்கையையும் வழிபட நன்மைகள் கூடும்.

ரிஷபம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மிதுனம்: முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் கடன் வாங்கவும் நேரிடும்  உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: இன்று நீங்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது உகந்தது.

கடகம்: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும்.  பிற்பகலுக்குமேல்  உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும்.

பரிகாரம்: கோயிலுக்குச் சென்று அம்பாள் சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.

கன்னி: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடவும்.

துலாம்: இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி பணிச் சுமை இருந்தபடி இருக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

விருச்சிகம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். . வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: சூரியபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

தனுசு: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை.

பரிகாரம்:  துர்கையை வழிபடுவது நலம் தரும்.

மகரம்:  நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும்.

பரிகாரம்:  கந்த சஷ்டி பாராயணம் செய்வது நன்மை தரும்.

கும்பம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அஷ்டம குரு தொடர்வதால், எதிலும் பொறுமை அவசியம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை தரும்.

மீனம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை.

பரிகாரம்:  துர்கையை வழிபடுவது நலம் தரும்.

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ