Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 9, ராசி பலன்

'ஜோதிட மாமணி' முருகப்ரியன்

25.9.16 ஞாயிற்றுக்கிழமை

மேஷம்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடவும்.

பரிகாரம்: துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்:காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் சிறு அளவில் மனஸ்தாபம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிதுனம்: இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காரியங்கள் அனுகூலமாகும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.  மாலையில் சிலருக்கு சிறிய அளவில் தலைவலி ஏற்படும்.மற்றவர்களால் மன அமைதி
குறையக்கூடும்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

கடகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள்.  சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பொறுமையுடன் இருப்பது அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

பரிகாரம்: நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட, சிரமங்கள் குறையும்.

சிம்மம்:வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.  மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

பரிகாரம்:  தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுங்கள்; சிரமங்கள் குறையும்.

துலாம்:இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.  வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்:  வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மாலையில் உறவினர்கள் வகையில் சிறு மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையாக இருக்கவும்
.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் உண்டாகும்

மகரம்:எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பொறுமையுடன் இருக்கவும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.

கும்பம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சிரமங்கள் குறையும்.

மீனம்: : இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். மாலை நேரத்தில் நீங்கள் கேள்விப்படும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

பரிகாரம்:  துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் சேரும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ