Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள்: புரட்டாசி 10, திங்கட்கிழமை

ராசி பலன் : 26.9.16 திங்கட்கிழமை


'ஜோதிடரத்னா' முருகப்ரியன்

மேஷம்:  மிகவும் உற்சாகமான நாள்.  அரசுத்தரப்பில் எதிர்பார்த்த  காரியம் அனுகூலமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: கோயிலுக்குச் சென்று அம்பாள் சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. 
 புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். 

பரிகாரம்:  துர்கையை வழிபடுவது நலம் தரும்.

மிதுனம்:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்:  கந்த சஷ்டி பாராயணம் செய்வது நன்மை தரும்.

கடகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புது முயற்சிகளில் ஈடுபடாமல்  வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். 

பரிகாரம்:  ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.

சிம்மம்:   இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் அழகாக சமாளித்துவிடுவீர்கள். மலைபோல் வேலைகள் குவிந்தாலும் அலட்டிக்கொள்ளாமல்  அழகாகச் செய்துமுடிப்பீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு உற்சாகம் தரும். சில நபர்களால் தேவையற்ற சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், ஒதுங்கிச் செல்வது நல்லது.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரக்கூடும். பயணத்தின்போது பொருட்கள் தொலைந்துபோக வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்: நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

துலாம்:  அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முடித்துவிடுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றியும் அதனால் பணலாபமும் கிடைக்கும்.

 பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.  

விருச்சிகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பள்ளி, கல்லூரி கால நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: இன்று நீங்கள் விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். 

தனுசு:  எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். 

 பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. 

மகரம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் இன்று உங்களுக்குச் சாதகமாக முடியும்.

பரிகாரம்: அனுமன் சாலீசா தெரிந்தவர்கள் பாராயணம் செய்யலாம். அல்லது ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட நன்மை உண்டாகும். 

கும்பம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உஷ்ணத்தின் காரணமாக வயிற்றுவலி, கண் வலி போன்றவைகள் ஏற்பட்டு உடனே உரிய சிகிச்சையின் மூலம் குணமாகிவிடும்.

பரிகாரம்:  கந்த குரு கவசம் பாராயணம் செய்வது நல்லது. 

மீனம்:   உற்சாகமான நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ