Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி திருக்குடை ஊர்வலம் அக்டோபர்1-ல் தொடக்கம்!

திருமலை வெங்கடாஜலபதி கோ‌யிலில் புர‌ட்டா‌சி மாத‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் பிரம்மோற்சவ விழா, அக்டோபர் 1ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவைச் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், சென்னை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலமும் ஏழுமலையான் கருடசேவைக்காக திருமலையில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் திருமலை ஶ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளன.

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோயிலில் அக்டோபர் 1ம் தேதி காலை 10.31 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி 'திருக்குடை ஊர்வலம்' தொடங்குகிறது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறது. தொடர்ந்து 2,3,4,5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில முக்கிய கோயில்களில் இரவு தங்குகிறது.

திருப்பதிக் திருக்குடை ஊர்வலம் செல்லும் வழி எங்கும், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து 6ம் தேதி 'திருக்குடை ஊர்வலம்' திருமலை செல்கிறது. திருமலையில், மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக 'திருக்குடைகள்' சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

அக்டோபர் 9ம் தேதி காலை சக்கர ஸ்நானம் நடைபெறுகிறது. அன்று இரவு கொடியிற‌க்க‌ப்ப‌ட்டு, பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

எடிட்டர் சாய்ஸ்