Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரட்டாசியில் அசைவம் கூடாதா?


புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே போதும், இந்துக்கள், குறிப்பாக வைணவ ஆன்மிக அன்பர்கள் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிடுவார்கள். அசைவ விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டமே இருக்காது. அசைவ ஓட்டல்களில் குருமா வகைகளையும் மட்டன் மற்றும் கோழிக் குழம்பு வகைகளையும் கேட்காமலே தாராளமாக ஊற்றுவார்கள். ஒவ்வொரு கஸ்டமரையும் பார்த்துப் பார்த்து கவனிப்பார்கள். விலையைத்தான் குறைப்பதில்லை. ஆனால், அதற்குப் பதிலாக அரை பிளேட் பிரியாணி, சிக்கன்-65, பெட் பாட்டில் கோலாவுடன் 100 ரூபாய்  என ‘காம்போ ஆஃபர்’கள்   நிறையவே வரிசைகட்டி நிற்கின்றன.

சென்னையில் சில்லறை விற்பனையில் 5 ரூபாய்க்கு விற்ற முட்டையின்  விலை 3.70 காசுக்கு விற்பனையாகிறது. கோழிக்கறியின் விலை சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 180 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்பனையானவை, இப்போது 140  முதல் 160 ரூபாய்க்குக் கிடைக்கிறது. வேளச்சேரி மார்க்கெட்டில் கிலோ 1,000 ரூபாய் வரை விற்பனையான வஞ்சிரம் மீன்  இப்போது 400 முதல் 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.   இதை நல்ல வாய்ப்பாக எண்ணி வஞ்சிரம், இறால் என ஒரு பிடிபிடிப்பவர்களும் உண்டு. இதற்கு நேர்மாறாக  காய்கறிகள் மற்றும் பழக்கடைகளில் கூடும் கூட்டம் ரொம்பவே அதிகம்.

பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம்.

ராசிக் கட்டத்தில் 6-வது ராசி கன்னி. புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசியில் இருக்கும். இந்த மாதத்தின் அதிபதி புதன். இவர் மகாவிஷ்ணுவின் அம்சம். எனவே, இந்த மாதத்தில்  பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும்.
, விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குப் போகும் போன்ற வழக்கங்களை  ஏற்படுத்தினர் , ஆன்மிக அன்பர்கள்.

அறிவியல் ரீதியாக சூரிய வெளிச்சத்தின் வலிமை புரட்டாசி மாதம் குறைந்து காணப்படும். மேலும், சூடாக இருந்த  பூமி மெள்ள மெள்ள குளிர்நிலைக்கு மாறிவரும் இந்த நேரத்தில்  அசைவ உணவை தவிர்ப்பதே, இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்பம் மிகுந்த நாடுகளுக்குப் பொருத்தமானது.

இதைப் பற்றி டயட்டீஷியன் நிபுணரான டாக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, ''மனிதனுக்குச் சிறந்த உணவு சைவ உணவா, அசைவ உணவா என்னும் சர்ச்சை காலங்காலமாகவே இருந்து வருகிறது. ஆதி மனிதன் பழங்கள், கிழங்குகள், காய்களைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்;. நெருப்பின் பயனை அறிந்த பின்னர்தான்  மாமிச உணவை உண்பவனாகவும் மாறினான் என்று சொல்வார்கள். அவரவருக்கு உரிய உணவுப்பழக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதெல்லாம், வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதுபோல் ,வருடத்தில்  ஒரு மாதம்  மாமிச உணவிலிருந்து வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் வந்திருக்கலாம். மற்றபடி சைவ உணவோ, அசைவ உணவோ அதற்கேற்ற வகையில் நம் வாழ்க்கை முறை இருக்க வேண்டும். ஒயிட் காலர் ஜாபில் இருந்துகொண்டு, மட்டனை ஃபுல் கட்டு கட்டினால், கொழுப்புச்சத்து அதிகரிக்கத்தான் செய்யும். அதற்கேற்ற உடல் உழைப்போ, உடற்பயிற்சிகளோ செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டால், அசைவு உணவு உண்பதில் எந்தத் தவறும் இல்லை.” என்றார்.

- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close