Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாமிரபரணி கரையில் ஒரு திருப்பதி!


ஆடி மாதம் அம்மனுக்கு எத்தனை விசேஷமோ, அதுபோல புரட்டாசி மாதம் பெருமாளுக்கு அத்தனை விசேஷம்! புரட்டாசி மாதத்தில், வீட்டில் உள்ள பெரியோர்கள்  பெருமாள் தரிசனத்தைத் தவிர்க்க மாட்டார்கள் .
பெருமாள் கோயில் என்றதும், எல்லோரின்  கண்  முன்னேயும் வருவது திருமலை திருப்பதிதான். திருப்பதியில் தினம் தினம் திருவிழா என்றாலும், புரட்டாசி மாதத்தில் இன்னும் விசேஷம்.


தமிழகத்தில் பல கோயில்களில் அர்ச்சாவதார ரூபமாக எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீனிவாச  பெருமாள். அவற்றுள் ஒன்றுதான் கருங்குளம் வேங்கடாசலபதி திருக்கோயில். திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில், தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் கருங்குளம் மலையின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், இரண்டு சந்தனக் கட்டைகள் உருவில்  காட்சியளிக்கிறார்.


முன்னொரு காலத்தில், சுபகண்டன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தீராத மாலைக் கண்நோய் ஏற்பட்டதால், திருப்பதி பெருமாளை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். திருப்பதி பெருமாள் சுபகண்டனின் கனவில் தோன்றி, ‘எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்து வை. அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமாகும். அதைத் தென்பாண்டி தேசத்தில், வகுளகிரி என்னும் மலையில் , தாமிரபரணி நதி அருகில் உறங்காப் புளியமரத்துக்கும், ஸ்ரீனிவாசபெருமாளுக்கும் நடுவில் என்னைப் பிரதிஷ்டை செய்வாயாக! தென்பாண்டி  தேசத்திலிருந்து  திருப்பதிக்கு வந்து என்னை தரிசிக்கச் சிரமப்படும் பக்தர்களுக்காக, நானே அங்கு சென்று அருள்பாலிக்க விரும்புகிறேன்” என்று சொல்லி மறைந்தார். 


மறுநாள்,  திருப்பதி திருவேங்கடமுடையானுக்குச் சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான் சுபகண்டன்.  கனவில் பெருமாள் சொல்லியவாறே, இரு சந்தன கட்டைகள் மீதமாயின. அவற்றை எடுத்துக்கொண்டு, தென் பாண்டி தேசத்துக்குப் புறப்பட்டான் சுபகண்டன் . அங்கே தாமிரபரணி நதியையும், வகுளகிரி என்னும் வகுளம்பூ பூத்த மலையையும் ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதியுடன் பார்த்துச் சேவித்து மகிழ்ந்தான் .


மாலை இருள் சூழ்ந்ததால், அரசன் தன் களைப்புத் தீர ஓய்வெடுத்தான். மறுநாள், கண் விழித்தபோது, உறங்காப் புளியமரத்துக்கும் , ஸ்ரீனிவாச சந்நிதிக்கும் நடுவில் பெருமாள் சுயம்புவாக எழுந்தருளி இருந்ததைப் பார்த்து அதிசயித்தான்.
திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் எவ்வாறு சுயம்புவாக இருக்கிறாரோ, அதுபோலவே இந்தச் சந்நிதியிலும் சுயம்புவாக இருக்கிறார் .திருமலை திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை  இந்தக் கோயிலில் நிறைவேற்றலாம் என்பது ஐதீகம். திருப்பதியிலிருந்து எம்பெருமாள் இங்கு வந்தமையால் இக்கோயில் 'தென் திருப்பதி ஸ்தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.


இத்திருக்கோயிலில் மற்றுமொரு முக்கியமான சிறப்பு ,இங்குள்ள உறங்காப் புளியமரமும், ஊறாக் கிணறும்! இந்தப் புளியமரத்தின் புளியம்பூ என்றுமே புளியங்காயாக மாறாது. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள புளிய மரம் என்றுமே உறங்காமல் இருக்கும். (உறங்காமல் இருப்பது என்றால் என்ன? - ரவிபிரகாஷ்) அதேபோன்று, இந்தக் கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும்.
இந்தக் கோயிலில் சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் திருநட்சத்திரமான திருவோண நட்சத்திர தினத்தில், குழந்தையில்லாத தம்பதிகள் வந்து விரதமிருந்து, மனதார பெருமாளை வணங்கி திருக்கண்ணமுது நிவேதனம் செய்து வழிபட்டால், புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் அழுத்தமான நம்பிக்கை.


செய்தி: பரமேஸ்வரி
(மாணவப்பத்திரிகையாளர்)
படங்கள்: சிதம்பரம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ