Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 12, ராசி பலன்

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

மிதுனம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும்.

பரிகாரம்: துர்கைக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

கடகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: முருகப் பெருமானை தரிசித்து வழிபடுவது நலம் சேர்க்கும்.

சிம்மம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.

துலாம்: உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம்.

பரிகாரம்: அம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் கூடும்.

விருச்சிகம்: அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.

தனுசு: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க சிரமங்கள் குறையும்.

மகரம்: இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி வரும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலை அதிகரிப்பதன் காரணமாக நீங்கள் செய்ய நினைத்த சில சொந்த வேலைகளை தள்ளிப்போட நேரும்.

பரிகாரம்: துர்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

மீனம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ