Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 13, ராசி பலன்

மேஷம்: இன்று காலைப் பொழுது உற்சாகமாக விடியும். புதிய முயற்சிகளை எடுப்பதாக இருந்தால், காலையிலேயே எடுப்பது அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பிற்பகலுக்குமேல் பணிச் சுமையும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: இன்று நீங்கள் நவகிரக சந்நிதியில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகள் கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும்.

பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வழிபட நன்மைகள் கூடும்.

மிதுனம்: பலவகைகளிலும் அனுகூலமான நாள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாலையில் லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

பரிகாரம்: துர்கை சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

கடகம்: காலையில் சற்று சோர்வாக இருந்தாலும் விரைவிலேயே சோர்வில் இருந்து விடுபட்டு பரபரப்பாக காணப்படுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும்.

பரிகாரம்: நவகிரக சந்நிதியில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட நலம் சேர்க்கும்.

சிம்மம்: இன்று காலையில் தொடங்கும் முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்க்காத பண வரவு இருக்கும். அலுவலகத்தில் பணிகள் அதிகரிக்கவும் அதனால் நேரத்துக்குச் சாப்பிடமுடியாத நிலையும் உண்டாகும். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

கன்னி: இன்று செலவுகள் அதிகரிக்கவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். தாய் வழி உறவுகளின் அன்பும் ஆதரவும் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் வந்தாலும் செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது பிரச்னைகளைத் தவிர்க்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படவும் லாபம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். மாலையில் சிறிய அளவில் மனச் சோர்வு ஏற்படக்கூடும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட நலம் சேர்க்கும்.

விருச்சிகம்: காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாகும். சகோதரர்கள் வகையில் அனுகூலமான பலன் ஏற்படும். ஜன்மச் சனி தொடர்வதால் பொறுமை எப்போதும் அவசியம்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: உற்சாகமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனுகூலமாகும். அலுவலகத்தில் வேலைகள் கூடுதலாக இருந்தாலும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் சிறிய அளவில் கடன் வாங்கவும் நேரிடும்.

பரிகாரம்: நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

மகரம்: தந்தை வழி உறவுகளால் அனுகூலம் பிறக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். கோர்ட் வழக்கில் உங்களுக்கு சாதகமான போக்கு காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் பொறுமை அவசியம்.

பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்: தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் சிலருக்கு ஏற்படும். தேர்வுகளை நன்றாக எழுதி அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: துர்கையை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட நலம் கூடும்.

மீனம்: இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். மனதில் இனம் தெரியாத உற்சாகம் நாள்முழுவதும் குடிகொள்ளும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். உங்கள் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்பதால் அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close