Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த நாள் இனிய நாள், புரட்டாசி 14, ராசி பலன்

மேஷம்: சகோதரர் களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. பிற்பகல்வரை  வேலைச் சுமை அதிகரிக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிதுனம்: அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கடகம்: இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

பரிகாரம்: துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்: இன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கன்னி: பிற்பகல்வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். தாயின் உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால் உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்வது நல்லது. சிலருக்குத் தோலில் அலர்ஜி போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபடுவது நல்லது.

துலாம்: இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் கொள்முதலுக்காகக் கூடுதல் பணம் செலவழிக்கவேண்டி வரும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்துவழிபடுவது நன்மை தரும்.

தனுசு: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும்.

பரிகாரம்: காளி தேவியை வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

மகரம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் நீங்கள் பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

பரிகாரம்: விநாயகரையும் துர்கையையும் வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும்.

கும்பம்: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக அவசியம். அலுவலக வேலைகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபடவும். அநாவசிய செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார்.

பரிகாரம்: நவகிரக சந்நிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

மீனம்: காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் கூடும்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ