Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அம்பாளை நம் அன்னையாக பாவிப்போம்’ காஞ்சி மஹா ஸ்வாமிகளின் வழிகாட்டல்


காஞ்சி மகா ஸ்வாமிகள் தன்னை நமஸ்கரிக்கும் பக்தர்களுக்கெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘’என்னை நமஸ்காரம் பண்றதைவிட, அம்பாள் அங்கே இருக்கா! அங்கே போய் காமாக்ஷியை நமஸ்காரம் பண்ணிக்கோ. க்ஷேமமா இருப்பே. எனக்கு முக்கியம் அம்பாள்’’ என்பார்.

அந்த அம்பாளுக்கு உகந்த நவராத்திரி திருநாள் நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் மகா ஸ்வாமிகள் நமக்குச் சொல்லிச் சென்ற அறிவுரை களை, அம்பாள் தத்துவங்களை, நவராத்திரியின் சிறப்புகளை அறிவது விசேஷம் இல்லையா?

ஆகவே, நல்லன யாவும் தரும் நவராத்திரி புண்ணிய தினங்களில் அம்பாளின் அருட்கடாட்சத்தைக் குறையின்றிப் பெற உதவும்  மகா ஸ்வாமிகளின் அருள் வாக்கை அறிந்து மகிழ்வோம்.

‘‘நவராத்திரியில் பராசக்தியான துர்காபரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதிதேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும் முப்பது முக்கோடி மூர்த்திகளாகச் சொன் னாலும் அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.
சிருஷ்டி செய்பவளும் அவளே, பரிபாலனம் செய்வதும் அவளே, சம்ஹாரம் செய்பவளும் அவளே என்று விளக்குகிறது, லலிதா சகஸ்ர நாமம்.

ஒரே பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறது; மகாலட்சுமியாகி சம்பத்துக்களையும், சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பிராட்டி சொல்லியிருக்கிறாள். தைத்திரீய உபநிஷதமும் ‘மாதாவை தெய்வ மாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வமாகக் கொள்வாயாக’ என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான். இப்படி தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். அம்மாவாக பாவித்து ஆதிசக்தியை வழிபடும்போடு நாம் குழந்தையாகி விடுகிறோம். அதனால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மைவிட்டு விலகிவிடும்.

எல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள்.

லோகம் முழுமைக்கும் காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அனுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரட்சிக்கும். அந்த அம்பிகையை அன்போடு நாம் தியானம் செய்யவேண்டும். அக்ஷரமயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும்.
அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதைப்போன்று, அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமுமாய் இருக்கிறாள் என்ற உணர்வோடு அம்பாளை உபாசித்துக் கொண்டே இருந்தால், நாமும் அன்பே உருவாகி லோகம் முழுமைக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.’’

ஆமாம்... அம்பாளை வழிபட நம் அகமும் புறமும் அவளின் திருவரு ளால் நிறையும். உலகமும் அன்பால் நிரம்பும். வேறென்ன வேண்டும்?

 

- சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ