Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமலையில் கருட சேவை!

திருமலை- திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், கருடக் கொடிக்கு  பூஜை செய்து, கோயிலின் தங்க துவஜஸ்தம்பத்தில்,  கருடக் கொடியை  ஏற்றுவார்கள். இது 'கருடன் கொடியேற்று விழா' எனப்படும் முதல் நிகழ்ச்சி.

திருமலை - திருப்பதியில் வேங்கடாசலபதி கோயிலில், புரட்டாசி மாதத்தில்  நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து, இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.


திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில், இன்று 7 - ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது.  இதில் பங்கேற்பதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த முறை 5 லட்சம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. 


வைகுண்டத்தில் இருந்த எட்டு விமானங்களில் ஒன்றான கிரீடாசலத்தை, ஏழுமலையானின் உத்தரவுப்படி திருப்பதிக்குக் கொண்டு வந்தவர் கருடன். 


திருப்பதியில் உள்ள சுவாமி புஷ்கரணி・என்னும் திருக்குளத்தை வைகுண்டத்தில் இருந்து கருடபகவான் கொண்டு வந்ததாகப் புராணங்கள் வர்ணிக்கின்றன.


திருமலையில் உள்ள திருமாமணி மண்டபத்தில், சிறகுகள் விரித்த நிலையில், கூப்பிய கரத்துடன் நின்றபடி  கருடன் நமக்காக வேங்கடவனைப் பிரார்த்திப்பதால், இங்கு பகவான் காட்சி தரும் கருடசேவை மிக விசேஷமாகும்.
திருமலையில் உள்ள ஸ்ரீஅனந்த  நிலையத்தில் விடியற்காலையில் பாடும் சுப்ரபாதத்தில் ‘உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த! உத்திஷ்ட கருடத்வஜ!’ என்ற வரிகள், ‘கருடக் கொடியோனே கோவிந்தா... பொழுது புலர்ந்தது; எழுந்தருள்வாய், எழுந்தருள்வாய்!’ என்னும் பொருள்படப் பாடப்படுகிறது. இது கருடாழ்வரின் சிறப்பு.


பெருமாளும் கருடனும்! 
தன் பக்தன் தனக்காக எதையும் கேட்காமல், உலக மக்களுக்காகவே கேட்கிறானே என மனம் மகிழ்ந்த பெருமான், கருடாழ்வாரின் சிறப்பு தெரியவேண்டும் என்பதற்காகவே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். உங்கள் குறையை கருடனிடம் சொல்லுங்கள்; நேரம் பார்த்து அதைத் திருமாலிடம் சொல்லி, உங்களுக்கு அவரின் வரங்களைப் பெற்றுத் தருவார்.
மகாபாரதப் போரின் கடைசி நாள் போரில், கருட வியூக யுத்தத்தால்தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். 
கஜேந்திர மோட்சத்தில், கருடனை விடுத்து, அவசரத்தில் பெருமாள் தான் மட்டும் சென்றுவிட்டார். ஆனால், நிலைமை அறிந்து அவரைவிடத் துரிதமாக கருடன் அவ்விடம் சென்றதைப் பாராட்டி, வியாக்யான சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளை, நீ பக்தனைக் காக்கும் வேகத்துக்கும் விவேகத்துக்கும் மங்கலம்' என்று போற்றுகிறார். 
புரட்டாசி மாதம் திருப்பதிக்குப் போக முடியாவிட்டால், அருகிலேயே எங்காவது ஒரு பெருமாள் கோயிலில் முதலில் கருடனை வணங்கிய பிறகு பெருமாளை வணங்கினால், அதிகம் நற்பலன்களைப் பெறலாம். கருடனுக்கு ஒரு நெய் விளக்கும், பெருமாளுக்கு ஒரு நெய் விளக்கும் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.


- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close