Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்ரிநாத் கோயில் நடை நவம்பர் 16-ல் சாத்தப்படுகிறது! 

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில், நவம்பர் 16-ம் தேதி மூடப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரத்து 170 அடி உயரத்தில் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது. அதனால், இப்பகுதியில் நவம்பர் மாதத்தில் மட்டும் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். முக்கியமாக இம்மாதத்தில் வரும் பனியானது கோயிலை முற்றிலுமாக மூடிவிடுவதால், கோயில் நடை ஆண்டு தோறும் நவம்பர் மாதம் சாத்தப்பட்டு வருகிறது. குளிர்காலம் முடிந்த பின்னர், வழக்கம்போல் மீண்டும் நடை திறக்கப்படும். இந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு வழிபாட்டுக்குப் பின் கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ