Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா! 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாள்கள் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, இந்த ஆண்டு வரும் 31-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு, காலை அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சந்நிதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை மற்றும் சண்முகர் சந்நிதியில் சண்முகப்பெருமான், வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடர்ந்து, கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும், தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில்தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்கும் நிகழ்ச்சி நவம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ