Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா! 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. நவம்பர் 6-ம் தேதி காலை 7 மணிக்கு திருக்கோயிலில் உள்ள அருள்மிகு கூடல் குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்பட்டு, சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. மேலும், நவம்பர் 14-ம் தேதி உச்சிக்காலத்தில் அருள்மிகு சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இதனிடையே கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை கோயிலில் வழக்கமாக உபயதாரர்களின் சார்பில் நடைபெறும் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை இந்த ஆண்டு நடைபெறாது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ