Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு! 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்தியாக உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
சபரிமலையில் ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை குலுக்கல் மூலம் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சபரிமலை மேல்சாந்தியாக இருந்து வரும் சங்கரன் நம்பூதிரி மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரின் பதவி காலம் அடுத்த மாதம் 15-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால், புதிய மேல்சாந்திகளைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல், நேற்று சபரிமலை சந்நிதானத்தில் நடைபெற்றது. இதில் சபரிமலை மேல்சாந்தியாக பாலக்காடு ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த டி.எம்.உண்ணிகிருஷ்ணன் மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி வாழப்பள்ளியைச் சேர்ந்த மனுகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close