Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மினி பேருந்துகள் இயக்க பக்தர்கள் கோரிக்கை 

ஐயப்ப சீசன் தொடங்கி உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானவர்கள் சபரிமலைக்கு மாலை போடத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மினி பேருந்துகள் இயக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டிக்கொண்டு, இங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வாகன வசதியின்றி பெரும்பாலும் அவதிப்படுகின்றனர். ஏற்கெனவே மகாலிங்கபுரத்தில் இருந்து அசோக் நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் மினி பேருந்துகளை இயக்கினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close