Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி தேவஸ்தான விடுதி அறைக்கு முன்பணம் செலுத்தும் முறை ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான விடுதி அறை பதிவுக்கு, முன்பணம் செலுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருமலையில் தங்கி சாமி தரிசனம் செய்வதற்காக, தேவஸ்தானம் சார்பில் 7 ஆயிரம் அறைகள் உள்ளன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான அறையை பதிவு செய்யும்போது, 3 மடங்கு முன்பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அறையைக் காலி செய்யும்போது, ரசீதைக் காண்பித்து முன்பணத்தைப் பெறும்போது காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அதற்குத் தீர்வுகாணும் வகையில், விடுதி அறை பதிவுக்கு முன்பணம் செலுத்தும் முறையைத் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து, அதனை உடனடியாக அமல்படுத்தியது. இதனால், விடுதி அறையில் ஒரு நாள் தங்க அதற்குரிய கட்டணம் மட்டுமே இனி வசூலிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ