Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா!

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றுவரும் இத்திருவிழாவில், தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.

இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வரும் 27-ம் தேதி காலை 8 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்துக்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசுக் காட்சி கொடுத்தல், இரவு 7.20 மணிக்கு சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ