Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு ஹோமங்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி, வரும் 31-ம் தேதி கார்த்திகை மாதம் தொடங்குகிறது. கார்த்திகை மாதத்தையொட்டி, இந்த மாதம் முழுவதும் திருப்பதியிலுள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கோயிலில் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஹோமங்கள் சிறப்பாக நடைபெற வேண்டி, வரும் 31-ம் தேதி முளைவிடுதல் உற்சவம் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து நவம்பர்  1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை கணபதி ஹோமம், 4, 5 தேதிகளில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம், 6-ம் தேதி நவகிரக ஹோமம், 7-ம் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 8-ம் தேதி முதல் 16 ம் தேதி வரை காமாட்சி அம்மன் ஹோமம் எனப்படும் சண்டி யாகம் நடைபெறுகிறது.

17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கபிலேஸ்வர சுவாமி ஹோமம், 28-ம் தேதி காலபைரவ சுவாமி ஹோமம், 29-ம் தேதி சண்டிகேஸ்வர ஹோமம் என கோயிலில் உள்ள மூர்த்திகள் அனைவருக்கும் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close