Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது! 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்,கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடும் நடைபெற்றது. யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்ற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. 

முக்கியமாக இன்று முதல் 5ம் திருநாள் வரையிலும், தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. விழா நாட்களில் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகின்றன. இதனைத்தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் நவம்பர் 5-ம் தேதி மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 6-ம் தேதி மாலை சுப்பிரமணியருக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவமும் வெகு சிறப்பாக நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

- கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close