Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பரில் இரண்டு சனி மஹா பிரதோஷம்!

நவம்பர் மாதத்தில் இரண்டு பிரதான சனி மஹா பிரதோஷம் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இரவும் பகலும் சந்திக்கும் நேரம் உஷத் காலம். இந்தக் காலத்துக்கு அதிதேவதை, சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல், பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம். இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு மனைவியான பிரத்யுஷா. அவளின் பெயராலேயே பிரதோஷ காலம் எனப்படுகிறது.

‘தோஷம்’ என்றால் ‘குற்றம்; பிரதோஷம் என்றால் ‘குற்றமற்ற’ என்று பொருள். குற்றமற்ற நேரத்தில் இறைவனை வழிபடுவது சிறப்பு ஆதலால் பிரதோஷ வழிபாட்டுக்கு மகத்துவம் அதிகம்.

பிரதோஷ வழிபாடு  நித்ய பிரதோஷம்,  பக்ஷப் பிரதோஷம்,  மாதப் பிரதோஷம், சோமப் பிரதோஷம், சனிப் பிரதோஷம்: சனிக் கிழமையுடன் சேர்ந்து வருவது சனிப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது. 

இவற்றில், சனிக் கிழமையுடன் சேர்ந்து வருவது சனிப் பிரதோஷம். சிவபெருமான், ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவம் ஆடினார் என்பதால் சனிப்பிரதோஷத்துக்கு சிறப்பு! அவ்வகையில் இந்த வருடம் நவம்பர் மாதத்தில் 12-ம் தேதி ஒன்றும், 26-ம் தேதி ஒன்றுமாக இரண்டு நாட்கள் சனி மகா பிரதோஷங்கள் வருகின்றன.

இந்த சனி மகா பிரதோஷத்தில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டால், 140 பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சிவனடியார்கள்.

 

 

எடிட்டர் சாய்ஸ்