Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காளஹஸ்தி கோயில் கொடி மரத்துக்கு ரூ.4 கோடி செலவில் தங்க முலாம்!

 

தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான சைவத்திருத்தலங்களுள் ஒன்றாகத் திகழும் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலிலுள்ள கொடி மரத்துக்கு 4 கோடி ரூபாய் செலவில் தங்க முலாம் பூசும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கோயிலில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முக்கியமாக காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் 5 லட்சம் ரூபாய் செலவில் செப்புத் தகடுகள் பொருத்தும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசும் பணி. இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதற்காக 4 கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ