Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவுக்காக சிறப்பு பேருந்துகள்!

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் நவம்பர் 5-ம் தேதி மாலை கடற்கரையில் நடைபெறுகிறது.

5-ம் தேதி நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4-ம் தேதி பிற்பகல் முதல் 6 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், தூத்துக்குடி, நாகர்கோவில் ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close