Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்டம்: நாகை மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 5-ம் நாளான நாளை நடைபெறுகிறது.

நாளை காலை 5 மணி அளவில் சிங்காரவேலவர் திருத்தேருக்கு எழுந்தருள, காலை 7.30 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் தேரிலிருந்து கோயிலுக்கு சிங்காரவேலவர் எழுந்தருளுகிறார். அதனைத்தொடர்ந்து நெடுவேல்கன்னியிடம் சிங்காரவேலவர் சக்திவேலை வாங்க, அவரது முகத்தில் வியர்வைச் சிந்தும் அற்புதக்காட்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மகாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.


தேரோட்டத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close