Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஞ்சலகங்களில் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்!

 

சென்னையில் சில குறிப்பிட்ட அஞ்சலகங்களில் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் கிடைக்கும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அஞ்சல் துறை சார்பில் ரூ.300க்கான சிறப்புத் தரிசன டிக்கெட் சென்னை மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய அஞ்சலகங்களில் கிடைக்கும்படி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன டிக்கெட்டுகள், 56 நாள்களுக்கு முன்பு வரை பதிவு செய்துகொள்ள முடியும் வகையிலும், ஒரு தரிசன நுழைவுச் சீட்டில் அதிகபட்சமாக 6 பேர் வரை பதிவு செய்துகொள்ளும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு தரிசன டிக்கெட்டுக்கு 2 லட்டுகள் வழங்கப்படும் என்றும், கூடுதலாகப் பெறப்படும் லட்டு ஒன்றுக்கு ரூ.25 செலுத்த வேண்டும் என்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ