Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரளா அரசு சம்மதம்!

 

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார் என, கேரள அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், எழுத்துப்பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலின் ஆச்சாரப்படி இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தத் தடையை விலக்கி, பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குள் நுழையப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள அறநிலையைத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை அரசு எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார் என, கேரள அரசு அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close