Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஞ்சநேயர் கோயில் தினசரி அபிஷேகம்: டிசம்பர் முதல் முன்பதிவு!

நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 2017-ம் ஆண்டு தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் தொடங்குகிறது.

நாமக்கலில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்படும். பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருள்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர். இதுவரை அபிஷேக செலவை 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வருகிறது. இனி 2017-ம் ஆண்டு முதல் 5 பேர் வீதம் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2017-ம் ஆண்டுக்கான முன்பதிவு வரும் டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் தொடங்குவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ