Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழநியில் ரோப்கார் சேவை தொடங்கியது!

 

 

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உள்ள ரோப்கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பழநி மலை முருகன் கோயிலில் உள்ள ரோப்கார் சேவை மாதத்திற்கு 2 நாட்களும், வருடத்திற்கு ஒரு முறையும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் 5 ம் தேதி பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்ஜின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதுகள் சரிபார்க்கும் பணிகள் நேற்று வரை நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால், பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"ரோப்கார் பராமரிப்புக்காக கடந்த 34 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சேவை தொடங்கி உள்ளது. ரோப்காரில் சாப்ட், பேரிங், ரப்பர் புஸ் ஆகியவை புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 800 அடி வட்ட கயறு புதியதாக மாற்றப்பட்டுள்ளது. சுமார் 60 அடி உயர பல்சக்கரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெட்டிகள் மற்றும் இருக்கைளுக்கு புதியதாக வண்ணங்கள் பூசப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு; மீண்டும் இன்று முதல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறினார்.

- சிவகுமார் 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close