Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசின் அறிவிப்பால் திருமலையில் பக்தர்கள் தவிப்பு

திருமலையில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தேவஸ்தானம் பெற மறுத்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க உலகமெங்கிலிருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில், நள்ளிரவில் பயணம் செய்து, அடுத்த நாள் காலை திருமலைக்கு வந்த பக்தர்கள் இதனை அறிய வாய்ப்பில்லை. 

இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் இன்று காலை வரை, திருமலையில் பக்தர்கள் தரிசன டிக்கெட் வாங்கச் சென்றபோது, பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க தேவஸ்தானம் மறுத்துவிட்டது. இதனால், பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனைத்தொடர்ந்து, நேற்று பிற்பகலுக்கு பிறகு பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. அதேபோல், இன்று வரை 100 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், திருமலையில் உள்ள உணவகங்கள் மற்றும் இதர கடைகளில் பூஜை மற்றும் அடிப்படை பொருட்கள் கூட வாங்க முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close