Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் நாளை சஹஸ்ர கலச பூஜை தொடக்கம்!

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், நாளை முதல் வரும் 26-ம் தேதி சனிக்கிழமை வரை சபரிமலை சஹஸ்ர கலச (1008 கலசம்) பூஜை நடைபெறுகிறது.

சஹஸ்ர கலச பூஜையை முன்னிட்டு, நாளை காலை 4.45 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், மாலை 6 மணியளவில் பிரசாத சுதி கிரியகள், கணபதி பூஜை, அஷ்ட கலச பூஜை, ரக்சுக்னா ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து புண்யாஹம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

23 -ம் தேதி காலை 4.45 மணிக்கு மஹா கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு சஹஸ்ர கலசம் பூஜை நடைபெறுகிறது.

24-ம் தேதி காலை 4.45 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 9 மணிக்கு மர பாணி, 9.30 மணிக்கு ஐயப்பனுக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. 6 மணியளவில் குருவாயூரப்பனுக்கு, பிரசாத சுதி கிரியகள், கணபதி பூஜை, அஷ்ட்ட கலச பூஜை, ரக்சுக்னா ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து புண்யாஹம் ஆகியவை நடைபெறுகின்றன.

25-ம் தேதி காலை 4.45 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சஹஸ்ர கலசம் பூஜை நடைபெறுகிறது.

26-ம் தேதி காலை 4.45 மணிக்கு மஹா கணபதி ஹோமும், காலை 9 மணிக்கு மர பாணி பூஜை, 9.30 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகமும் நடைபெறுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ