Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1008 இளநீர் அபிஷேகத்துடன் சனி மகா பிரதோஷ வழிபாடு!

காபிரதோஷத்தை முன்னிட்டு திருப்புடைமருதூர் ஶ்ரீநாறும்பூநாதர் கோயிலில் 1008 இளநீர் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த திருப்புடைமருதூரில், சுமார் 1200 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த ஶ்ரீகோமதி அம்பாள் சமேத ஶ்ரீநாறும்பூநாதர் கோயில் புகழ் பெற்று திகழ்கிறது. திருப்புடைமருதூர் பொருநை நதிக்கரையில் உள்ள இந்த புண்ணிய தலம், 'கடையார்ச்சுனம்' என்றும் போற்றப்படுகிறது.

இத்திருக்கோயிலில் ஶ்ரீநாறும்பூநாதர் லிங்க திருமேனியாக, சற்று சாய்ந்தே காணப்படுகிறார். முன்வினைப்பயன், மன கவலைகள் மற்றும் தீராத குறைகளோடு, இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களை சிவபெருமான் செவி சாய்த்து கேட்பதாலேயே, இக்கோயிலில் நாறும்பூநாதர் சற்று சாய்ந்தே காணப்படுவதாக ஐதீகம். இப்பேர்பட்ட சிறப்புகள் கொண்ட இக்கோயிலில், வருகிற 26ம் தேதி மகா பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பூஜையில், சுவாமி, அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு 1008 இளநீரால் அபிஷேகம் செய்யப்பட உள்ளன.

சிறப்பு அபிஷேகத்தைத்தொடர்ந்து, 1008 தாமரை, செண்பம், மனோரஞ்சித மலர்களால் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையும் செய்யப்பட உள்ளன.  

முக்கியமாக, மகா பிரதோஷ சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் பேருந்து நிலையங்களில்  இருந்து மதியம் 3 மணி முதல் திருப்புடைமருதூருக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

- ரா.வளன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close