Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசின் விதிமுறைகள்:

சபரிமலை

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. எல்லோரும் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்லும் காலம் இது. எங்கு பார்த்தாலும், 'சாமி சரணம்', 'ஐயப்பா சரணம்' என்னும் சரண கோஷங்களைக் கேட்கமுடிகிறது.
லட்சக்கணக்கில் சபரிமலைக்குச் செல்ல இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் கேரள அரசு சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு:

 1. பூஜைக்குரிய எந்த ஒரு பொருளையும் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் எடுத்துவரக் கூடாது.
2. பம்பை நதியில் புனித நீராடிய பிறகு, உடைகளை (அணிந்து வந்த வேட்டி மற்றும் துண்டு) நீரில் விடுவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது. எனவே பக்தர்கள் அவ்வாறு செய்வதை தவிர்க்கவேண்டும்.


3. சபரிமலைக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள், தாங்கள் வரும் வாகனங்களில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஏனென்றால், மாநில சோதனைச் சாவடிகளில் முதலுதவிப் பெட்டி இல்லாத வாகனங்களை கேரள அரசு அனுமதிப்பது இல்லை.
4. தமிழ்நாட்டிலிருந்து குழுவாகச் செல்லும் பக்தர்கள் சமைக்க எரிவாயுக் கலன்களை  வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடாது. இதற்கும் சோதனைச் சாவடிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
5. தாங்கள் பயணம் செய்யும் பேருந்தில், 2 ஓட்டுநர்கள் இருக்கவேண்டியது அவசியம். ஓட்டுநர்களிடம் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் பக்தர்கள் பற்றிய முழுவிபரங்களும் இருக்க வேண்டியது முக்கியம்.
6. சபரிமலைக்குச் செல்லும் அனைத்து பக்தர்களும், குறிப்பாக சிறுவர் மற்றும் சிறுமியர்கள், தாங்கள்  தங்கள் புகைப்படம் ஒட்டி முகவரி எழுதிய  அடையாள அட்டையைக் கட்டாயமாகக் கழுத்தில் அணிந்திருக்கவேண்டும். இது கூட்ட நெரிசலில்  அவர்கள்  வழிதவறினால், அவர்களது குழுவினரிடம் சேர்ப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
சபரிமலை சந்நிதானத்தில் இருக்கும் தமிழக உதவி மையங்கள்: 


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் தமிழக பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சபரிமலையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் வழியாக பக்தர்களுக்கு பலதரப்பட்ட உதவிகளைச் செய்து வரும் ராமச்சந்திரனிடம் பேசினோம்.


"தமிழ்நாட்டிலிருந்து வரும் மலையாளம் தெரியாத பக்தர்களுக்கு உதவுவதற்காக, இந்த உதவி மையத்தில் தமிழக உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கூட்ட நெரிசலில் வழிதவறியவர்களை, உரிய  குழுவில் ஒப்படைக்க உதவுவது, மருத்துவ உதவி கிடைக்க உதவுவது, சந்நிதான நடைதிறப்பு மற்றும் தரிசன நேரம், சபரிமலையில் நெய் அபிஷேகம் செய்யும் இடம், முக்கிய பரிவார  கோயில்களுக்குச்  செல்ல வழிகாட்டுதல்கள் போன்ற தகவல்கள் இந்த வழிகாட்டுதல் மையத்தில் வழங்கப்படுகின்றன. இந்த உதவி மையம் சபரிமலை சந்நிதானம் செல்லுமிடத்துக்கு அருகேயுள்ள கலையரங்கம் அருகில் அமைந்துள்ளது. இது கடந்த 16.11.2016 முதல் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றது. மேலும், இந்த தற்காலிக உதவி மையம் வருகிற  22.01.2017 வரை இங்கு செயல்படும்" என்றார். 
சபரிமலை சந்நிதானத்தில் இயங்கிவரும் 24 மணிநேர உதவி மையத்தில் இருக்கும் உதவியாளர்களைத் தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண்கள்:
எஸ். இராமச்சந்திரன் - 099940-45032,
எஸ்.சதீஷ்குமார் - 07596570229
வி.என்.சிவகுமார் - 098942-52632,
எ.அஜிகுமார் - 099466-12009,
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ, கொடுக்கப்பட்டுள்ள ' கட்டணம் இல்லாத தொலைபேசி எண்': 1800 -425-1757
சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்குறிப்பிட்ட விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு, தடைபடாத சபரிமலை யாத்திரை சென்று சபரிமலை ஐயப்பனின் அருளைப்பெறலாம். 

 - ம.மாரிமுத்து ,

படங்கள் - வீ.சக்தி அருணகிரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close