Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலையில் காணிக்கை செலுத்த புதிய வசதி அறிமுகம்


மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிக்கும்  நடவடிக்கையாக ரூ.500, 1000 நோட்டுகளுக்கு தடை விதித்ததை அடுத்து, சாமி தரிசனத்திலும், காணிக்கை செலுத்துவதிலும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால், தற்போது சபரிமலையில் இ-காணிக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்வைப் இயந்திரம் மூலம் பக்தர்கள் பூஜைக்கான தொகையையும், பிரசாதம் பெறவும்,  காணிக்கை செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்' என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக கவுன்டர்களில் பணம் செலுத்தி அப்பம், அரவணை பிரசாதங்கள் போன்றவற்றை பக்தர்கள் பெறலாம். இதில் டெபிட் மற்றும் கிரெடிட்  கார்டுகளை எந்த வங்கியாக இருந்தாலும் பயன்படுத்தி ஒரு ரூபாயில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை நேற்று ஆலப்புழா துணை ஆட்சியர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close