Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காளஹஸ்தி கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் தங்கக் கவசம்!

காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் லிங்கத்துக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகின்றன. 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில், தங்கத்தால் ஆன யக்ஞோபவீதம், சூரிய, சந்திரர்கள், நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் வடிவம் பொறித்த தங்கக் கவசம் தற்போது மூலவர் லிங்கத்துக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்குள்ள ஆவுடையாருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பே கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் முழுவதற்கும் தங்கக் கவசம் பொருத்தலாம் என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 15 லட்சம் ரூபாய் மதிப்பில்  தங்கக் கவசம் அமைத்துத்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்