Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வார ராசி பலன் - நவம்பர்  28 முதல் டிசம்பர் 4 வரை


இந்த வார ராசி பலன்களை கணித்துத் தந்துள்ளார்  'ஜோதிட கலாரத்னா' குமரன் தேவசேனா.

 

 

மேஷம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கூடி வரும். அவ்வப்போது மனதில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். வழக்குகளைப் பொறுத்தவரை முன்னேற்றம் எதுவும் இருக்காது.
அலுவலகத்தில் வழக்கமான பணிகளே தொடரும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. புதிய வேலைக்கு முயற்சி செய்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். பங்குதாரர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது அவசியம். வியாபார முதலீட்டுக்காக கடன் எதுவும் இந்த வாரம் வாங்கவேண்டாம்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். மூத்த கலைஞர்களின் ஆதரவை கேட்டுப் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேல் கல்வி படிப்பதற்கு வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள், குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சுமாரான வாரம்தான்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  டிசம்பர் 1, 2, 3
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  5, 6, 9
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 30
முக்கியக் குறிப்பு: நவம்பர் 28, 29, 30 டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன        
    அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்      
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்     
    பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
 

ரிஷபம்:  பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். குடும்ப விஷயமாக புதிய முடிவுகள் எதுவும் எடுப்பதாக இருந்தால் கூடுமானவரை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாகவே இருக்கும். தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். கணவன் - மனைவி இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் இருவருமே பொறுமை காப்பது அவசியம்.
அலுவலகத்தில் உங்களுடைய கடினமான உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரத்தில் அவசர முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு கலை நிகழ்ச்சிகள் சம்பந்தமாக வெளிநாட்டுப் பயணம் செல்லும் அதிர்ஷ்டமும் உண்டு.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகளுக்கு நிம்மதி தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 30, டிசம்பர் 4
அதிர்ஷ்டம் தரும் எண்: 4, 7,9
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 1,2,3 
முக்கியக் குறிப்பு: நவம்பர் 28, 29, டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் எந்த காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை ஆலோசித்து ஈடுபடவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27  முறை தினமும் பாராயணம் செய்யவும்.
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே. 

மிதுனம்: தேவையான அளவு பணவரவு இருக்கும். செலவுகளும் அதிகம் இருக்காது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்னியம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவும். உடனடி சிகிச்சையால் தாயின் உடல்நலம் சீராகும்.
அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில்  பல வகைகளிலும் அனுகூலமான வாரமாக இருக்கும். இப்போது இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கடையை மாற்றுவதற்கு அனுகூலமான நேரம் இது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நினைத்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். போதுமான பணம் கைக்கு வரும். வரக்கூடிய வாய்ப்புகள் எதையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது.
மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். அதனால் படிப்பில் ஆர்வம் குறையும். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும். 
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 30, டிசம்பர் 1, 2, 6
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 3, 2
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 3 பிற்பகல் முதல் 
முக்கியக் குறிப்பு: நவம்பர் 28, 29, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தினங்களில் பயணங்களையும் புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
 

கடகம்: பணவரவு சுமாராகத்தான் இருக்கும். கணவன் - மனைவி இடையில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் புதன்கிழமைக்கு மேல் எடுப்பது அனுகூலமாக இருக்கும். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பின்னர் உரிய சிகிச்சையினால் சரியாகும்.
அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படும். உங்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான பணிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம். ஆனால், புதிதாகக் கடன் எதுவும் வாங்கவேண்டாம்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சுமாரான வாரம்தான். புதிய வாய்ப்புகள் எதுவும் அமையாது. இருக்கும் வாய்ப்புகளை கவனமாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.
மாணவ மாணவியர் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுவது அவசியம். கூடியவரை பாடங்களில் ஆர்வம் செலுத்துவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை ஓரளவு நிம்மதியாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 2, 3, 4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 4, 7
முக்கியக் குறிப்பு: நவம்பர் 30-ம் தேதி எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சிம்மம்: வருமானம் திருப்திகரமாக இருக்கும்.  வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் - மனைவி இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றாலும் உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர் நண்பர்களிடம் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பேசுவது நல்லது.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். பணிகளில் தங்களின் புதிய அணுகுமுறை சாதகமான பலனைத் தரும். அதன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் உள்ள வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். 
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்கவேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகளுக்கு  மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 3, 4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5, 7
முக்கியக் குறிப்பு: நவம்பர் 28,29,30 டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை                   

கன்னி: பணவரவு நல்லபடியே காணப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண முயற்சிகள் பலிதமாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.கடன்களில் ஒரு பகுதி தீரும். உடல் ஆரோக்கியம் நல்லபடியே காணப்படுகிறது. சுபநிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் கலந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.  சக பணியாளர்கள் தங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.
வியாபாரத்தில் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து வேறு வசதியான இடத்துக்கு மாற முயற்சிகளை மேற்கொள்ளலாம். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். துறையைச் சார்ந்த நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேல்படிப்புக்கான  முயற்சிகளில் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 30, டிசம்பர் 3, 4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,9
முக்கியக் குறிப்பு:  நவம்பர் 28,29, டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 
 

துலாம்: வருமானம் திருப்திகரமாகவே உள்ளது. எனவே செலவுகளைச் சமாளிப்பதில் சிரமங்கள் எதுவும் இருக்காது. முக்கியமான முடிவுகள் எதுவும் எடுப்பதாக இருந்தால் இந்த வாரம் தாராளமாக எடுக்கலாம். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் உறவு பாராட்டி வருவார்கள். ஒரு சிலருக்கு கண்களில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். அதன் பயனாக உங்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். 
வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். புதிய முதலீடுகளை இந்த வாரம் செய்யவேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வாய்ப்புகள் கிடைத்தாலும், வருமானம் குறைவாகவே கிடைக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். என்றாலும் உடல்நலன் பாதிக்கப்படும் என்பதால், கவனமாக இருந்துகொள்ளவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாகவே இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 3, 4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,9
முக்கியக் குறிப்பு: நவம்பர் 28,29, 30, டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருந்துகொள்வது அவசியம்
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.
 

விருச்சிகம்: பணவரவு தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகவே கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். சகோதர வகையில் மனக்கசப்பு ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு வரன் தேடும் முயற்சியில் இந்த வாரம் ஈடுபடலாம்.
அலுவலகத்தில் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால் தவறு நேரிட வாய்ப்பு உண்டு. சக பணியாளர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால், வியாபாரத்தை விட்டுவிடலாமா என்று மனதில் சிறு சஞ்சலம் உண்டாகும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரும். இடைவிடாத நிகழ்ச்சிகளால் மனதில் சோர்வும் உடலில் அசதியும் உண்டாகும்.
மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சுமாரான வாரம்தான். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்களுடைய பணிகளில் கவனமாக இருக்கவேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  நவம்பர் 28,29, டிசம்பர் 3,4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  2,4,5
முக்கியக் குறிப்பு: நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆகிய நாள்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

தனுசு: பணவரவு சுமாராகவே இருக்கும். அதிகம் உழைக்கவேண்டி இருக்கும் என்பதால் உடல் அசதி உண்டாகும். செலவுகள் அதிகரிப்பதால் மன நிம்மதி பாதிக்கப்படக்கூடும். நெருங்கிய உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்கவும்.  நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல விஷயம் இந்த வாரம் அனுகூலமாக முடியலாம்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை இந்த வாரத்தில் தொடங்கலாம்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தட்டிப் போன வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வருமானமும் போதுமான அளவுக்கு இருக்கும்.
மாணவ மாணவியர் பாடங்களை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். படிப்பதில் கூடுதல் நேரம் செலவிடவேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சுமாரான வாரம்தான். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் பணிகளில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 28, டிசம்பர் 1,2,3
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,6
முக்கியக் குறிப்பு: நவம்பர் 29,30 டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் வழக்கமான பணிகளில்கூட கூடுதல் கவனம் தேவை. அப்போதுதான் சில பிரச்னைகளைத் தவிர்க்கமுடியும்.
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.
பத்தனாய்ப் பாட மாட்டேன்  பரமனே பரம யோகீ
எத்தனாற் பத்தி செய்கேன்  என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்  அடியனேன் வந்த வாறே.

மகரம்: வருமானம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். கணவன் - மனைவி இடையில் சிறு அளவில் மனக் கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் அனுசரித்துச் செல்லவும். மனதில் அவ்வப்போது வீண் குழப்பங்கள் ஏற்பட்டு உங்கள் அன்றாட காரியங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போகலாம்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய யோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பற்று வரவில் சாதகமான போக்கே காணப்படுகிறது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். தேவையான அளவு வருமானமும் கிடைக்கும்.
மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அப்போதுதான் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பலவகைகளிலும் அனுகூலமான மனநிம்மதி தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு இதுவரைத் தடைப்பட்ட ஊதிய உயர்வு இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 30, டிசம்பர் 1,2,4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6
முக்கியக் குறிப்பு: நவம்பர் 27,28 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?

கும்பம்: ஒருபக்கம் பணவரவு இருக்கும் என்றாலும் தொடர்ந்து செலவுகளும் இருந்துகொண்டே இருக்கும். கணவன் - மனைவி இடையில் சிறு அளவில் மனக் கசப்பு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து பொறுமையுடன் நடந்துகொள்ளவும்.  வெளியூர்களுக்குப் பயணம் செல்லும்போது கைப்பொருளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது அவசியம். 
அலுவலகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். ஒருசிலருக்கு பணியின் காரணமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும். 
வியாபாரத்தில் கவனம் செலுத்தமுடியாதபடி உடல் ஆரோக்கியம்  பாதிக்கப்படுவதற்கும், குடும்பப் பிரச்னைகள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.
கலைஞர்கள் வெளியூர்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உணவினால் அலர்ஜி ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படக்கூடும்.
மாணவ மாணவியர் முயற்சியுடன் கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சுமாரான வாரம்தான். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம்  அனுசரித்துச் செல்லவும். 
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 29, டிசம்பர் 1
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1,4,5
முக்கியக் குறிப்பு: நவம்பர் 28, 30, டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

மீனம்: வருமானம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை.கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கப்பெறலாம்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். ஒருசிலருக்கு சிறிய அளவில் ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் கூடும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். 
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு நிகழ்ச்சிகளின் காரணமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உண்டு.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. தேவைக்கேற்ப பணம் கிடைப்பதால் குடும்ப நிர்வாகத்தில் குறை எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். 
 அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: நவம்பர் 29,30, டிசம்பர் 1,2
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:   1,4,7
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 28
முக்கியக் குறிப்பு: 28, டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் முக்கிய காரியங்களைத் தொடங்கவேண்டாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்    
காடுடையசுட லைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்    
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த    
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.    

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close