Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 10 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை பணம் நேற்று எண்ணப்பட்டன. அதில் சுமார் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 200 கிராம் தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் ஏராளமான பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். இதனையடுத்து அந்த பணம் மற்றும் நகைகள் அனைத்தும் வங்கியில் வரவு வைக்கப்பட்டன.

இந்த ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள உண்டியல், கடந்த 28 நாள்களுக்கு முன்பு திறந்து காணிக்கை தொகை கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது நேற்று மீண்டும் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ