Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பம்பை நதியில் சோப்பு போட்டு குளிக்கத் தடை!


 பம்பை நதியில் பக்தர்கள் சோப்பு போட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சுவாமி ஶ்ரீஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில், தினமும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், புல்மேடு பாதையும் திறக்கப்பட்டு அதன் வழியாகவும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள புண்ணிய நதியான பம்பையில் நீராடிவிட்டு செல்வது வழக்கம். கடந்த காலங்களில் பம்பை நதியில் குளிக்கும்போது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி  குளித்துவிட்டு, அதன் காகிதங்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் பம்பை நிதி முற்றிலுமாக சுகாதாரமற்ற நிலையில் அசுத்தமாக காணப்பட்டது. அதனால், இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பம்பை நதி மாசுப்படுவதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. 

அதன்படி, பம்பை நதியில் பக்தர்கள் ஆடைகளை கலைந்து செல்லக்கூடாது என்றும், சோப்பு, ஷாம்பு, எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தடையை மீறி பம்பை நதியில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திக் குளித்தால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் கிரிஜா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close