Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட பண்டிபூர் "பிரின்ஸ்" புலி மரணம்... இதுதான் காரணமா?

புலி பிரின்ஸ்

கர்நாடகா மாநிலம், பண்டிபூரில் இருக்கும் புலிகள் சரணாலயம் அவ்வளவு ஃபேமஸ். புலிகளை பார்க்க விரும்பும் ஆர்வலர்கள் பெரும்பாலும் கேமரா, கையுமாக படையெடுத்து செல்வது பண்டிபூருக்குத்தான். அந்த பண்டிபூர் சரணாலயத்தின் செல்லக்குட்டி “பிரின்ஸ்” என்றழைக்கப்பட்ட ஒரு புலிதான். இதுவரை அதிகமான தடவை கேமரவால் க்ளிக் செய்யப்பட்டவன் பிரின்ஸ் தான் என்கிறார் பண்டிபூர் சரணாலய அதிகாரி ஹிராலால். 12 வயதாகும் பிரின்ஸின் நடையே கெத்துதான். பண்டிபூருக்கு பெருமை சேர்த்தவன் பிரின்ஸ் என்கிறார் பண்டிபூரில் இருக்கும் வன அதிகாரி ஒருவர். இப்போது அந்த பிரின்ஸ் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் இறந்த புலியொன்றின் சடலம் ஒன்றை வன அதிகாரிகள் கண்டெடுத்திருக்கிறார்கள். அது பிரின்ஸ்தான் என்கிறார்கள். மனிதர்களுக்கு கைரேகை போலதான் புலிகளுக்கு உடலில் இருக்கும் கோடுகள். அது, பிரின்ஸின் முந்தைய படங்களோடு ஒத்துப் போவதாக சொல்கிறார்கள். ஆனால், பிரின்ஸுக்கு காலில் ஒரு கட்டி இருந்ததாகவும் அது இந்தப் புலிக்கு இல்லையென்று கண்டறிந்திருக்கிறார்கள். புலி, இறந்து சில நாட்கள் கழித்தே சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அந்தக் கட்டி கரைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. 

இதற்கிடையில் 20 பேர் கொண்ட குழு ஒன்று பிரின்ஸை தேடி காட்டுக்குள் இறங்கியிருக்கிறது. சடலம் கிடைத்த இடம் பிரின்ஸின் எல்லைக்குள் தான் வருகிறது.  பிரின்ஸை சுற்றுலா பயணிகள் நிறைய பேர் படம் பிடித்த குண்டகரே என்ற இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் தான் சடலம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புலியின் சராசரி ஆயுள் 12-14 ஆண்டுகள். பிரின்ஸூக்கு 12 வயதாகிவிட்டது. எனவே, இறந்திருக்கலாம் என்கிறார்கள். பிரின்ஸின் வயிறு காலியாக இருந்திருக்கிறது. அதனால் பசியால் இறந்திருக்கலாம். அல்லது, வலுவான இன்னொரு புலியுடன் நடந்த இரைக்கான மோதலில் இறந்திருக்கலாம் என பல காரணங்களை அடுக்குகிறார்கள். இந்தியாவில் தொடர்ந்து பல விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் இறந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸும் தண்ணீர் கிடைக்காமல் இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. சடலத்தின் மாதிரிகளை டெஸ்ட்க்கு அனுப்பியிருக்கிறார்கள். முடிவுகள் வந்தால் புலியின் இறப்புக்கு உண்மையான காரணம் எதுவென்பது தெரியும்.

பிரின்ஸ்

புலிகள் எப்போதும் ‘சிங்கிள்’ஆகவே வாழ விரும்பும். தனக்கென ஒரு எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டி இன்னொரு புலி வந்தால் சண்டைதான். இந்த ஏரியாச் சண்டையில் பிரின்ஸ் இதுவரை இரண்டு புலிகளை போட்டுத்தள்ளியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் பண்டிபூர் சரணாலயத்தில் மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்தும் புகைப்படம் ஒன்று வெளியானது. அப்போதே புலிகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்துவரும் பிரச்னை பெரிதாக எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில்தான் புலிகள் அதிகமாக வாழ்ந்து வந்தன. அந்தப் பகுதி மக்களுக்கு பல வழிகளில் புலிகள் பொருளாதார ஆதாயங்களை தந்திருக்கின்றன. ஆனால், ராஜஸ்தானில் தற்போது கிட்டத்தட்ட 17000 கிராமங்கள் தண்ணீர் பிரச்னையில் தவிக்கின்றன. இது மக்களை மட்டுமல்ல, புலிகளையுமே பாதித்திருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கும் புலிகளை இந்தத் தண்ணீர் பிரச்னை பாதித்திருக்கிறது.

-கார்க்கிபவா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close