Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறுமையும் வேண்டும்... கோபமும் வேண்டும்... பிரகலாதன் கூறும் உண்மைகள்!


ந்தேகம் ஏற்படுவது என்பது மனித இயல்புதான். சில மனிதர்கள் மீதும், சில சம்பவங்கள் குறித்தும், சில பொருள்கள் குறித்தும் நமக்கு சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது ஏற்படக்கூடும். ஆனால், சில சமயங்களில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதிலேயே நமக்கு சந்தேகம் வந்துவிடும். இப்படியான சந்தேகங்கள் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரங்களில், நாம் சூழ்நிலை அறியாமல், எதிரே இருப்பவர்களின் தரம் அறியாமல் நடந்துகொள்வதால், பல பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன.இதைப் பற்றி பக்தப் பிரகலாதன் கதை வழியாக 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன் நம்மிடம் பகிர்ந்துக் கொள்கிறார். 

பிரகலாதன்பிரகலாதனின் பேரனான மகாபலி சக்கரவர்த்திக்கும் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது. 'கோபம் கொள்ளக்கூடாது என்று சொல்லும் அதே நேரத்தில் பொறுமையும் கூடாது என்றும் சொல்கிறார்கள். பொறுத்துக் கொள்ளமுடியாத சம்பவங்கள் நடக்கும்போது, கோபம் வருவது நியாயம்தானே? அப்படி இருக்கும்போது கோபத்தை ஏன் குற்றமாகக் கூறுகிறார்கள்? தவறுகள் நடக்கும்போது பொறுமையாக இருங்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த இரண்டில் எது சரி?' என்று மகாபலிக்குக் குழப்பம் ஏற்பட்டது.

பிரகலாதன்

தன்னுடைய குழப்பத்தைப் போக்கிக் கொள்ள தன் தாத்தா பிரகலாதனிடம் சென்றான். பேரனின் சந்தேகத்தை முழுமையாகக் கேட்ட பிரகலாதன், ''பொறுமையும் வேண்டும்; கோபமும் வேண்டும்'' என்று கூறினார். பிரகலாதன் கோபமும் வேண்டும் என்று கூறியதை மகாபலியால் நம்பமுடியவில்லை. 'தனக்கு பல இன்னல்கள் ஏற்பட்டபோதும், கோபம் கொள்ளாமல் பொறுமையாக இருந்த பிரகலாதனா கோபமும் வேண்டும் என்று கூறுகிறார்' என்று நினைத்து மகாபலி குழம்பிப் போனான். 

பேரனின் குழப்பத்தைப் புரிந்துகொண்ட பிரகலாதன், மகாபலியை தன் அருகில் அழைத்து, விவரமாகக் கூறினார்."கோபம் எப்போதும் உயர்ந்தது அல்ல.. அதே தருணத்தில் பொறுமையை எப்போதும் கடைப்பிடிப்பது சிறந்ததும் அல்ல.பொறுமையாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் கோபப்பட்டால் அனைத்தும் கெட்டுவிடும். கோபமாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் பொறுமையாக இருந்தால் நிறைய அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.பொறுமையாக இருந்தால் பகைவர்கள் மட்டுமல்லாமல் அவனது பணியாளர்களும், பெற்ற பிள்ளைகளும், கட்டிய மனைவியும் அவமதிப்பர். குடும்பத் தலைவன் மிகவும் பொறுமையாக இருந்தால், எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுப்பர். முதலாளி பொறுமையாக இருந்தால், அவரது பணியாட்கள் வேலையில் கவனமாக இருக்கமாட்டார்கள் மாறாக அவரது உடைமைகள், வாகனம், ஆசனம், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை தங்களுடையதாக்கிக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆக, ஒருவர் மிகப்பெரிய மனிதராக இருந்தாலும்,கோபப்பட வேண்டிய தருணங்களில் பொறுமையாக இருந்தால் அவமானம்தான் மிஞ்சும். எல்லாச் சூழ்நிலைகளிலும் பொறுமையாக இருக்க வேண்டியதில்லை...." என்றார்.

தொடர்ந்து கோபம் கொள்ளாமை பற்றியும் மகாபலியிடம் கூறினார். "பொறுமையின்றி அடிக்கடி கோபப்படுபவர்களை அந்தக் கோபமே    அவர்களைத் தண்டித்துவிடும். கோபத்தால் பகை, நோய், தனிமை, பொருள் நாசம், அவமானம், மயக்கம், மனக் குழப்பCutம், ஆதரவு இல்லாமை போன்ற நிலைகளை அடைகின்றான். ஐஸ்வர்யம், உறவினர்கள், நல்ல நட்பு, பெயர், மரியாதை, ஆகியவற்றை இழக்கின்றான். பதவியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் காரணமின்றி தங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் கோபம் கொள்ளக்கூடாது. அப்படி காரணம் இல்லாமல் கோபப் பட்டால், தகுந்த நேரம் வாய்க்கும்போது அவனை பழிக்குப் பழி வாங்கிவிடுவார்கள். அது அவன் பதவிக்கு மட்டுமல்லாமல் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். எனவே கோபம் கொள்ள வேண்டிய நேரத்தில் கோபப்பட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டியச் சூழ்நிலையில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலைகளிலும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

நரசிம்மரை வழிபடும் பிரகலாதன்

அது மட்டுமல்ல, நமக்கு நன்மை செய்தவர்களின் மீது கோபப்படக் கூடிய சூழ்நிலை எழுந்தாலும், அவர்கள் தவறே செய்திருந்தாலும், முன்பு அவர்கள் நமக்குச் செய்த உதவியைக் கருதி கோபப்படாமல் இருக்க வேண்டும். ஒருவன் அறியாமல் செய்த தவறை மன்னிக்கப் பழக வேண்டும். ஆனால், ஒரு தவறைச் சிந்தித்து, திட்டமிட்டு, தீங்கு இழைக்க வேண்டும் என்று நினைத்துச் செய்தால் அவனிடம் பொறுமை காக்க வேண்டிய அவசியம் இல்லை.பிறரின் பலமும், நமது பலமும் அறிந்த பின்னரே நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்". என்று கூறி மகாபலியை ஆசீர்வதித்தார் பக்த பிரகலாதன்.

- கி.சிந்தூரி..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close