Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் வரை... எந்த நாள் நல்ல நாள்? #Astrology

பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம்வரை எந்த நாளில் தொடங்கலாம்? என்னென்ன செய்யலாம் என்பது பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான பஞ்சாங்க ஜோதிட பிரகஸ்பதி பராசரம் பாலசுப்பிரமணியம் கூறும் தகவல்களின் தொகுப்பு இது.
திருமணப் பொருத்தம்:

திருமணத்துக்குரிய வயது மட்டுமின்றி, மனவளர்ச்சியும் மிகவும் தேவை. இருபாலரின் (மணமகன், மணமகள்) பெற்றோர்களும் மனம் தெளிவாகவும், சுற்றுச்சூழலில் அமைதியாகவும், இதமாகவும் இருக்கும் நாளில் ஒரு ஜோதிட விற்பன்னரை அணுகி, அவர்கள் இருவருக்கும் பொருத்தமாக உள்ளதா என அறிய வேண்டும். மற்ற பொருத்தங்களுடன் இருவரின் ஜாதகங்களைக் கொண்டு ஆயுள் பொருத்தம், ஜாதகானுகூலம், யோகானுகூலம், தசா சந்தி மற்றும் தோஷங்கள் ஆகியன பற்றி ஆராயப்பட வேண்டும். 

பெண் பார்க்கும் படலம்

பெண்பார்க்கும் படலம்:

இருவருக்கும் தாராபலம் இருக்கும் நாளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்கள் ஏற்றவை. லக்னம், 1, 4, 7, 10 ஆம் இடங்களான கேந்திர,  5, 9 ஆம் இடங்களான திரிகோணங்களில் சுபகோள்கள் வீற்றிருக்க வேண்டும். சுபகோள்கள் லக்னத்தையும் ஏழாமிடத்தையும் பார்ப்பது பாவகோள்கள் 3, 6, 11ல் இருப்பது. திருமணம் போன்ற சுபகாரியத்துக்குரிய நட்சத்திரங்கள் உள்ள நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் பார்க்கப் புறப்படும் நேரமும் மிகவும் முக்கியமானது. ராகு காலம், எமகண்டமின்றி சுபநேரமாக இருத்தல் அவசியம்.


 

நிச்சயதார்த்தம் அல்லது நிச்சயதாம்பூலம்:

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி துவிதியை, திருதியை, அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும் கேந்திர கோணங்களில் பாவ கிரகங்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.

திருமணம்
 

திருமாங்கல்யம் செய்ய ஏற்ற நாள்: 

அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம்,  உத்திராடம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் துவிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும்   ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் இரண்டாமிடம் சுத்தமான லக்னமும் உள்ள நாள்கள் ஏற்றவை. 

பந்தக்கால் நடுவதற்கு ஏற்ற நாள்:

திருமணத்துக்கு முன்பாக வீட்டின் முன்பு பந்தக்கால் போடுவது. மாவிலைத் தோரணம் கட்டுவது மரபு. முதலில் பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமத்தாலும், மாவிலையினாலும், அலங்கரித்து ஈசான்ய பாகத்தில் நடுவது வழக்கம். இதற்கு துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திங்கள், ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம்,  உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள்  உள்ள நாள்கள் ஏற்றவை.  1, 4, 7, 10  ஆம் இடங்களான கேந்திர கோணங்களில் பாவக் கிரகங்கள் இல்லாத சுபலக்னம் தேர்ந்தெடுத்து செய்தல் வேண்டும்.

 

மணமக்கள்
 

திருமணம்:

அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம், ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய  லக்னங்கள் ஏற்றவை.  8 ஆம் இடத்தில் குரு உள்ள லக்னத்தைத் தவிர்க்க வேண்டும். புதன் சுக்கிரன் 6, 8 ஆம் இடத்திலிருப்பது நல்லதல்ல. 3, 6, 8, 11 ஆம் இடத்தில் பாவக் கிரகங்கள் இருக்கலாம். ஏழாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close