Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடும்ப உறவுகளைப் பேணுவதற்கான நெறிமுறைகள்! - ரம்ஜான் சிறப்பு கட்டுரை-3

நெறிமுறைகளைக் கையாள வேண்டும்? ‘வேத வரிகளும் தூதர் மொழிகளும்' நூலின் ஆசிரியரும் பேராசிரியருமான டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் தனது அடுத்த நூலுக்காக தொகுத்துள்ள கட்டுரை நம் விகடன் வாசகர்களுக்கு வழங்குகிறார். இதில் உறவுகளைப் பராமரிப்பதில் உள்ள நெறிமுறைகளை அழகாக தொகுத்து வழங்கியுள்ளார்.

 

உறவுகளை

 

பெற்றோரைப் பேணுக ! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

* அவன் அழிந்து போகட்டும் ! அவன் அழிந்து போகட்டும் ! அவன் அழிந்து போகட்டும் ! என்றார் நபி அவர்கள். யாரைக் குறித்து இப்படிச் சொல்கின்றீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டபோது ‘பெற்றோர்களில் ஒருவரோ, அல்லது இருவரோ, முதுமையான நிலையில் இருந்தும் அவர்களுக்குப் பணிவிடை புரியாது சுவனம் (சொர்க்கம்) செல்லாதிருப்பானே அவன்' என பதிலளித்தார்கள்.(நூல்: முஸ்லிம்)

* கீழ்படியும் மகன் பெற்றோர்களை அன்புடன் பார்க்கும் ஒவ்வொரு பார்வைக்கும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஹஜ் கடமை செய்ததற்குரிய கூலியை இறைவன் வழங்குவான்.

தோழர்கள் கேட்டார்கள்: அவர் ஒவ்வொரு நாளும் நூறு முறை பார்த்தாலுமா? ஆம்! இறைவன் மிகப் பெரியவனும் அருளாளனும் ஆவான், என்றார் நபிகள் நாயகம் .(நூல்:பைஹகீ)

*  இறைவனுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவன பெரும் பாவங்களாகும்.(நூல்: புகாரி)ஹபீப் முஹம்மது*  நீங்கள் உங்கள் தந்தையை வெறுக்காதீர்கள்; தந்தையை வெறுப்பது இறை மறுப்புக்கு (குப்ரு) இணையான செயலாகும். (நூல்: புகாரி, முஸ்லிம்) 

*  ஒரு  மனிதன் தந்தையின் நண்பரை ஆதரிப்பது நன்மையில் மிகப் பெரிய நன்மையாகும். ( நூல்: முஸ்லிம்)
தாய்மை, இறைவன் கூறுகின்றான்: 

* தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன. (திருக்குர்ஆன் :46:15) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

* நபித்தோழர் ஒருவர் நபிகளிடத்தில் வினவினார்: 

“இறைத்தூதரே! நான் நல்லவிதமாக நடந்துகொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார்? 
நபி (ஸல்) அவர்கள்: உம் அன்னையே மிகவும் உரிமை பெற்றவள்.
நபித்தோழர்: அன்னைக்குப் பிறகு யார்?
நபி (ஸல்) அவர்கள்: உம்முடைய அன்னை.
நபித்தோழர்: பிறகு யார்?
நபி (ஸல்) அவர்கள்: உம்முடைய தந்தை. அதற்கு அடுத்தபடியாக உமது நெருங்கிய உறவினர், உம் நன்னடத்தைக்கு உரியவர்கள்.
(நூல்: புகாரி,முஸ்லிம்)
 இல்லறம் ஒரு நல்லறம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தொழுகை

* நீங்கள் உங்களுடைய மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபடுவதும் ஒரு நல்லறம் என்றார்கள். 
நபித்தோழர்களோ , இறைத்தூதர் அவர்களே!  நாங்கள்  எங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள எங்களது மனைவியரிடத்தில் உறவில் ஈடுபடுவதும் நல்லறமாகுமா? எனக் கேட்டனர். 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்களுக்கு அனுமதிக்கப்படாத வழியில் உங்கள் இச்சைத் தீர்த்துக் கொண்டால் தீமை எழுதப்படுவது போல. அனுமதிக்கப்பட வழியில் இல்லற வாழ்வில் ஈடுபவதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்றார்கள்.(நூல்: முஸ்லிம்)  

நல்ல துணையை நாடுக!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
குலமா! குணமா! பணமா! அழகா!

 * ஒரு பெண் அவளது செல்வம், குடும்பம், அழகு, மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். எனினும், மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

* இல்லறம், நல்லறமாக மனைவியை நேசி! உள்ளங்கள்  இணைவதே உண்மையான காதல்; இல்லறத்தின் மூலமே அது முழுமைபெறுகிறது .

இறைவன் கூறுகின்றான்: 

*  அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. 30:22 
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் :30:21)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

* இறைநம்பிக்கை கொண்ட எந்த ஆணும் இறைநம்பிக்கை கொண்ட மனைவியை வெறுக்க வேண்டாம். அவளிடமுள்ள ஒரு குணம் பிடிக்கா விட்டாலும், இன்னொரு குணத்தை நேசிக்கக் கூடும்! (நூல்: முஸ்லிம்)

*  ஒருவரை நேசிப்பதற்கு திருமணத்தை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. (நபி மொழி)

*  மனைவியிடத்தில் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர் ஆவார். (நூல்:திர்மிதி)

*  உங்கள் ஒருவர் தம் மனைவியரை பகலில் அடிமையை அடிப்பது போல் அடித்து விட்டு, பின்னர் அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் உறவு கொள்கின்றனர். (இவ்வாறு செய்வது கேவலம்  இல்லையா?) (நூல் : புகாரி 4942, 5204)

* மனைவியை  (தவறுகளுக்காக) தண்டிப்பதாயின் வீட்டில் மட்டுமே தண்டிக்கவேண்டும்.( நூல்: அபூதாவூத்)

* அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும், அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உள்பட என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புகாரி 56)

* அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, "நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(நூல் : அபூதாவூத் 1830)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close