Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூக உறவுகளைப் பராமரிக்க என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்றலாம்? ரம்ஜான் சிறப்புக் கட்டுரை-4

`வேத வரிகளும் தூதர் மொழிகளும்' நூலின் ஆசிரியரும் பேராசிரியருமான டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் தனது அடுத்த நூலுக்காக தொகுத்துள்ள கட்டுரையை நம் விகடன் வாசகர்களுக்கு ரம்ஜான் சிறப்புக் கட்டுரையாக வழங்குகிறார். இதில் குடும்ப உறவுகள், சமூக உறவுகள் ஆகியவற்றுடன் என்ன வகையான நெறிமுறைகளைப் பின்பற்றி உறவுகளைப் பராமரிக்க வேண்டும் என்பதை அழகாக தொகுத்து வழங்கியுள்ளார்.

ரம்ஜான்

* எவருக்கு உணவளிப்பது உங்கள் கடமையோ அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பது ஒரு பாவமாகும்.

- (நூல்: அபூதாவூத்).

* எனக்கு விருப்பமானவர்கள் அல்லாஹ்வும் அவன் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களுமே. எனினும் அந்தக் கூட்டத்தாரிடம் எனக்கு ரத்த பந்த உறவு உள்ளதின் பேரால் அவர்களைச் சேர்த்துகொள்ளவேண்டுமென நினைத்துக்கொள்வேன்.

-(நூல்: புகாரி, முஸ்லிம்)

* தாயாரின் சகோதரி, தாயின் தகுதியைப் பெற்றவராவார்.

-( நூல்: திர்மிதி).

* திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகின்றான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, மற்றும் அக்கிரமமான செயல்களை விலக்குகின்றான். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு, உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான்.

- (திருக்குர்ஆன்: 16: 90)

* உங்களிடையே பண்பு நலன்களும், வசதிகளும் உடையவர்கள்,

‘தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவ மாட்டோம்’ என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்துவிட வேண்டும்; பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா என்ன? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

- (திருக்குர்ஆன்: 24 :22)

ரம்ஜான்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

* தானத்தில் சிறந்தது உங்கள் மீது வன்மம் கொண்டுள்ள உறவினருக்கு வழங்குவது.

- (நூல்: அபூதாவூத்)

* 'எனக்கு உதவினால், நானும் உதவுவேன்' என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். உறவை இணைத்து வாழ்பவர், உறவினர்கள் உறவைத் துண்டித்தாலும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர் ஆவார்.

- (நூல்: புகாரி).

* சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு கண்ணியம் அளிக்காதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

- (நூல்: அபூதாவூத்)

* ஒரு முதியவரை ஒரு இளைஞர் கண்ணியப்படுத்தினால், அவர் முதுமையடையும்போது அவரைக் கண்ணியப்படுத்தும் ஒரு இளைஞரை இறைவன் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை.

- (நூல்: திர்மிதி)

* குடும்ப நலனைப் புரிய கவலைப்பட்டு, சமூகத்தை மறப்பதும், சமூகத்துக்காக குடும்பத்தை ஆதரவற்ற நிலையில் விட்டு விடுவதும் கூடாது. எதிலும் சமநிலை பேணப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை

* இறைப்பாதையில் நீ செலவளித்த ஒரு பொற்காசு, அடிமையை விடுவிக்க நீ செலவளித்த பொற்காசு , ஒரு ஏழைக்கு நீ செலவளித்த ஒரு பொற்காசு , உன் குடும்பத்தினருக்கு நீ செலவளித்த ஒரு பொற்காசு இந்த நான்கில் மிகப் பெரும் கூலியைப் பெறும் பொற்காசு உன் குடும்பத்தாருக்கு நீ செலவளித்ததுதான்.

- (நூல்:முஸ்லிம்).

* இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி நீ செலவளிக்கும் ஒவ்வொரு செல்வத்துக்கும் உனக்கு நற்கூலி வழங்கப்படாமல் விட்டு, விடப்படுவதில்லை. எதுவரை எனில், உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக் கவளம் வரை.

- (நூல்: புகாரி,முஸ்லிம்)

அண்டை வீட்டினர் உரிமைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

* இறைவன் மீதாணையாக..! அவன் இறைநம்பிக்கையில்லாதவன் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். "இறைவனின் தூதரே! யார் இறைநம்பிக்கையில்லாதவர் என்று வினவப்பட்டது"எவனுடைய அண்டை வீட்டினர் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புப் பெறவில்லையோ, அவர் '' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

- (நூல்: புகாரி,முஸ்லிம்)

* அண்டை வீட்டினர் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் இறைநம்பிக்கையாளர் அல்லர்.

- (நூல்: பைஹகீ)

* நான் நல்லது செய்கின்றேனா, அல்லது தீமை செய்கின்றேனா என்று எப்படி அறிவது? என்று ஒருவர் வினவினார்? நபி(ஸல்) அவர்கள் விடைய அளித்தார்கள்:

"நீ நன்மை செய்வதாக உனது அண்டை வீட்டினர் கூறக்கேட்டால், நீ நன்மைதான் செய்கின்றாய். நீ தீமை செய்வதாக உனது அண்டை வீட்டினர் கூறக்கேட்டால், நீ தீமையைத்தான் செய்கின்றாய். (ஏனெனில் ஒருவரைப்பற்றி அதிகம் அறிந்தவர் அண்டை வீட்டினர்தான்.

- (நூல்: இப்னு மாஜா)

நோன்புக்கஞ்சி

* ஒரு இறைநம்பிக்கையாளரின் நல்வாழ்வுக்குத் தேவையானவை.

1) விசாலமான வீடு. 2) நல்ல அண்டை வீட்டுக்காரன். 3) நல்ல வாகனம். - (நூல்: அஹமத்)

* ஒருவர் தமது சொத்துக்களை விற்கும்போது அதனை வாங்க அதிக உரிமை படைத்தவர் அண்டை வீட்டினரே. - (நூல்:புகாரி)

* நபிகளிடத்தில், "இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டினர் உள்ளனர். அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது? என ஆயிஷா (ரலி) கேட்டார் . அவ்விருவரில் எவருடைய வீட்டு வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு என நபியவர்கள் பதிலளித்தார்கள்.

- (நூல்:புகாரி)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close