Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனப் பேரரசரைப் போதிதர்மர் ஏன் நிராகரித்தார்?

ந்தியாவிலிருந்து புறப்பட்ட ஞானி போதிதர்மர் சீனாவுக்குச் சென்றபோது முதலில் தென்சீனாவை அடைந்தார். அப்போது அரசர் ‘வூ’ பத்தாயிரம் புத்த துறவிகளுடன் எல்லையில் வந்து போதிதர்மரை வரவேற்றார். சீனாவுக்குள் கால் பதிக்கும் முதலாவது ஞானமடைந்த ஞானி இவர். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் கனடா, டொரொன்டோவைச் சேர்ந்த சமய மெய்யியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான எஸ்.குருபாதம்...

 

இந்தியாவிலிருந்து வருகை தரும், ஞானமடைந்த மகானைத் தனது ராஜ்ஜியத்தின் எல்லையில், அரச அதிகாரிகளுடனும் துறவிகளுடனும் வரவேற்கக் காத்து நின்ற மாபெரும் சக்கரவர்த்தி அவர். வருகை தந்த போதிதர்மரைப் பார்த்ததும் திகைப்படைந்தார். இப்படியான கோலத்தில் அவரை அரசர் எதிர்பார்க்கவில்லை. குருபாதம்காலில் அணியும் பாதணிகளில் ஒன்றைத் தலையில் தூக்கிவைத்திருந்தார். இடுப்பில் ஒரு சிறிய துணியை அணிந்திருந்தார். செம்பினாலான பட்டி ஒன்றை இடுப்பைச் சுற்றி அணிந்திருந்தார், கையில் ஒரு தடி... என ஒரு விசித்திரமான கிறுக்குத் தோற்றம்.

'இவர் என்ன விசித்திரமான மனிதராக இருக்கிறார்' என்ற திகைப்புடன் அரசர் பார்த்தார். போதிதர்மர் சிரித்தார். ' `இந்த ஆள் என்ன பைத்தியமோ' என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே, உம்மை நான் கணித்துவிட்டேன்' என்றார்.

பேரரசர் ‘வூ’: நான் அரசன். புத்த பிக்குகளுடன் உங்களை வரவேற்க வந்துள்ளேன்.

போதிதர்மர்: எனக்குத் தெரியாது!!

அரசர்: புத்த மதத்தின் வளர்ச்சிக்குப் பெரும் செலவு செய்கிறேன். பல ஆயிரம் மடாலயங்கள், விகாரைகள் நிர்மாணித்துள்ளேன். புத்த போதனைகளை, சீன மொழியில் மொழிப்பெயர்த்து, போதனைசெய்ய வைத்திருக்கிறேன். தினமும் பத்தாயிரம் துறவிகளுக்கு உணவளிக்கிறேன். தர்ம காரியங்கள் செய்கிறேன். பௌத்தம் வளர்வதற்கும் துறவிகளுக்கும் இல்லையென்று சொல்லாமல் பெரும் ‘தானங்கள்’ செய்கிறேன். எனக்கு என்ன கிடைக்கும்?

போதிதர்மர்: எதுவும் இல்லை. நரகலோகம் என்று ஒன்று இருக்குமானால், உமது செய்கைகள் உம்மை அங்கே கொண்டுபோய் வீழ்த்தும். உமது தானங்களுக்குள்ளும், தர்ம காரியங்களுக்குள்ளும் பெரும் பேராசையும் சுயநலமும் மறைந்திருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்து உமது அழிவும் மறைந்திருக்கிறது.

அரசர்: என்ன சொல்கிறீர்கள்? நான் செய்வதெல்லாம் புண்ணியச் செயல்கள், புனிதமாகவே வாழ்கிறேன். 

போதிதர்மர்: உமது புண்ணியம், புனிதம் உம்மை நரகக் குழியில் வீழ்த்தும். தர்மம், புண்ணியம், புனிதம் என்று எதுவுமில்லை.

அரசர்: நீங்கள் யார்?

போதி போதிதர்மர்: தெரியாது.
 அரசர்: நான் யார்?

போதிதர்மர்: தெரியாது.
 அரசர்: முன்னோர்கள் சொன்ன பிரகாரம்  நடக்கிறேன். பெரும் துறவிகள் கூறுவது  போலெல்லாம்  தானங்கள் செய்கிறேன்.  உங்கள் பதில்கள் வித்தியாசமாக உள்ளன.  எனக்குப் புண்ணியம் கிடையாதா...  மேலோகம் கிடையாதா?

 போதிதர்மர்: ஒன்றுமில்லை!


 அரசர்: உங்களுடன் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. நான் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது நாட்டுக்கு விருந்தினராக வந்துள்ளீர்கள். நீங்கள் எனது அரண்மனையில் அரச விருந்தினராகத் தங்கலாம்.


போதிதர்மர்: உங்கள் ராஜ்ஜியத்துக்கப்பால் வர மாட்டேன், இந்த எல்லைக்கப்பால் வர மாட்டேன். உமது எல்லையை நீர் தீர்மானித்துக்கொள்ளும்.

உமக்கு மரணம் நெருங்கும்போது என் நினைவு வரும். மரண பயமும் தனிமையும் உமது போலி நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை, புண்ணியங்களை, மேலோகக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறியும்.
உம்மை நீர் அரசராகப் பார்க்கிறீர். புண்ணியங்கள், நன்மைகள் செய்பவராக எண்ணிக்கொள்கிறீர். மேலோகக் கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறீர். ‘நீ நீயாக இல்லை’ அரசப் பதவியை எடுத்துவிட்டால் ‘நீ யார்?’ உமது பத்தாயிரம் துறவிகளை எடுத்துவிட்டால் ‘நீ யார்?’ நீ கூறிய அத்தனையையும் எடுத்துவிட்டால் ‘நீ யார்?’.
‘நீ யார்?’ என்பதை ‘நீ அறியாதவரையில் உனக்குள் குழப்பம் இருக்கும். நீங்கள் விரும்பும்போது என்னை எப்போதும் சந்திக்கலாம்.
 (தன்னை ஒரு சாமானியராக, போதிதர்மர் கருதியதை அடுத்து கோபத்துடன் அரசர் அரண்மனை திரும்பினார்).
போதிதர்மர், தென் சீனாவுக்குள் செல்லாது, யாங்கீஸ் ஆற்றைக் கடந்து வடசீனா சென்றார்.


சில வருடங்களுக்குப் பின்...
தென்சீனாவில் அரசர் ‘வூ’ அரசாண்ட சாம்ராஜ்ஜியத்தை கோஜிங் படைகள் கைப்பற்றின. அரண்மனை அமைக்கப்பட்டிருந்த நான்ஜிங் நகரம் வீழ்ச்சியடைந்தது. அரசர் சிறைவைக்கப்பட்டார். சகலத்தையும் இழந்தார். அவருடன் இருந்தவர்கள் அவரை விட்டு விலகினர். அரசர் தான் ‘யார்?’ எனச் சிந்திக்கத் தொடங்கினார்.
சிறையிலிருந்தவாறே ‘நரகலோகம்’, ‘நரகலோகம்’, என்று புலம்பிக்கொண்டிருந்தார். நோய்வாய்ப்பட்டு, எல்லோராலும் கைவிடப்பட்டு, மரணம் நெருங்கும்போது போதிதர்மரின் ஞாபகம் வந்தது. தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துக் கூறினார். 'போதிதர்மர் எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் எனக்கு உதவக்கூடியவர் அவர் ஒருவரே' என்றார்.

சீனா

இவரது உறவினர் போதிதர்மரைத் தேடிச் சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சிச் செய்தி காத்திருந்தது. போதிதர்மர் ‘இல்லை’ என்பதை அறிந்தனர். அவர் அரசர் ‘வூ’க்கு ஒரு செய்தியை, சீடர்களிடம் விட்டுச் சென்றுள்ளார் என்பது மட்டும் தெரியவந்தது. அச்செய்தி பின்வருமாறு இருந்தது. 'இறக்கும்போது என்னை நினைவுகொள்வீர், உங்கள் மறுவுலகக் கற்பனை இப்போது உடைந்து நொறுங்கத் தொடங்கிவிட்டது. மரணபயம் உங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டது. மரணத்தை ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள் காரணம் மரணம் தர்க்கமற்றது.

துறவிகள்

அரசர் ‘வூ’க்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. 'நான் பேரரசராக தலைவணங்காதவராக இருந்தபோது போதிதர்மர் கூறியவை அன்று எனக்குப் புரியவில்லை. மறுஉலக எண்ணத்திலே இருந்துவிட்டேன். போதிதர்மரை பைத்தியக்காரராக நினைத்துவிட்டேன். அவர் என்னைக் காப்பாற்ற முயற்சி செய்தார். எனக்கு நடக்கப் போவதை அவர் அன்றே கணித்துவிட்டார். இந்த நேரத்தில் உதவக்கூடியவர் அவர் என்று நினைத்தேன். அந்த மகானைப் போய் பார்க்கத் தவறிவிட்டேன். புரிந்துகொள்ளமுடியாத ஒரு மாபெரும் மகான் அவர் என்றார். 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close