Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஞாயிறு முதல் சனி வரை... எந்தெந்த நாள்களில் எந்தக் கோலமிடுவது நல்லது?

ம் இல்லத்துக்கு வருகை புரியும் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்பது, நம் வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் அழகான கோலம்தான். எதிர்மறையான எண்ணங்களோடு நம் வீட்டிற்குள் நுழைபவர்களைக்கூட நேர்மறையாகச் சிந்திக்க வைக்கும் வல்லமை கோலங்களுக்கு உண்டு. ஆம், கோலம் இல்லாத வீடு மகாலட்சுமி வாழ விரும்பாத இடம். வீட்டின் வாசலில்தான் மகாலட்சுமி குடியிருப்பாள். மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தை மங்களகரமாக வைத்திருந்தால், நம் இல்லங்களில் அவளின் அருட்பார்வை கிட்டும் மங்கள அடையாளமான கோலத்தை எப்போது, எப்படி, எந்தெந்த நாள்களில் எந்தக் கோலமிடுவது என்பதைப் பற்றியும் அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

கோலம்

கோலம் எப்போது, எப்படிப் போட வேண்டும்:

அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னரே கோலமிடவேண்டும்.

வீட்டு வாசலை அழகாகச் சுத்தப்படுத்தி, வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவேண்டும். 

முடியாதவர்கள் நீர் தெளித்தும் கோலம் இடலாம்.

ஆனால், ஏற்கெனவே பயன்படுத்தாத தூய்மையான தண்ணீரில்தான் வாசலைச் சுத்தப் படுத்தவேண்டும்.

அரிசி மாவில் கோலமிடுவது சிறப்பான ஒன்று.

கோலத்தின் தொடக்கம் மற்றும் முடிவானது, அதன் மேற்புறமாகத்தான் இருக்கவேண்டும்.

கோலம் வரைந்ததும் அதன்மீது காவி வண்ணத்தை தீட்டலாம். 

கோலத்தில், சானத்தின் பசுமையானது விஷ்ணுபெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன.

கோலமிட்ட பின்னர்  பூசணி, செம்பருத்தி போன்ற மலர்களை அதன் நடுவே வைக்கவேண்டும். இது நமக்கு செல்வச்செழிப்பைத் கோலம்தரக்கூடியது.

கோலமிடும்போது கவனிக்க வேண்டியவை:

வலது கையால்தான் கோலமிடவேண்டும். இடதுகையால் கோலமிடக்கூடாது.

ஆள்காட்டி விரலைத் தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிடவேண்டும்.

குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது.

தெற்கு திசையை நோக்கியோ, அல்லது தெற்கு திசையில் முடியும்படி கோலமிடக்கூடாது.

வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது.

சுபதினங்களில் ஒற்றைக்கோடுகளில் கோலம் இருக்கக்கூடாது. இரட்டைக் கோடுகளாகத்தான் இருக்க வேண்டும்.

தெய்விக வடிவங்களைக் குறிக்கும் கோலங்களை வீட்டுவாசலில் போடக் கூடாது.

தெய்விக யந்திரங்களைக் குறிக்கும் ஹ்ருதய கமலம், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் , நவகிரக கோலங்கள், போன்றவற்றை பூஜை அறைகளில் மட்டும்தான் போடவேண்டும்.

மேலும், இதை அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும்.

அமாவாசை மற்றும் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்யும் நாள்களில் கோலம் போடக்கூடாது.

கோலம்

எந்தெந்த நாள்களில் எந்தக் கோலமிடவேண்டும்:

ஞாயிறு - சூரியக்கோலம், செந்தாமரைக் கோலம்

திங்கள் - அல்லிமலர்க் கோலம்

செவ்வாய் - வில்வ இலைக்கோலம் 

புதன் - மாவிலைக் கோலம்

வியாழன் - துளசிமாடக் கோலம்

வெள்ளி மற்றும் பௌர்ணமி - தாமரைக் கோலம் (எட்டு இதழ்)

சனி - பவளமல்லிக் கோலம்.

 

கோலமிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இல்லங்களில் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.

துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது.

அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமைகொண்டது.

கோலத்தின் 8 பக்கங்களிலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

சாணமிடுவது கிருமிநாசினியாகச் செயல்படும்.

மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனைத் தொழுவது, உடலுக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

லட்சுமி கடாக்ஷம்

கோலம் என்பதும் நம் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. வாழ்வியல் முறைகளோடு வழிபாட்டு முறைகள் இணைந்ததே தமிழர்களின் பண்பாடு. அதனால் கோலமிடுவதை ஒரு வேலையாக நினைத்துச் செய்யாமல் ஒரு வழிபாடாக நினைத்து பயபக்தியோடு செய்ய வேண்டும். நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகும்! நாமும் சீரும் சிறப்போடும் வாழலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close