Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்.ஆர்.ஈஸ்வரியின் கந்தர்வக் குரலில் பரவசமூட்டும் 10 அம்மன் பாடல்கள்!

கிராமக்கோயில்கள் முதல் நகரத்துக் கோயில்கள் வரை அத்தனையும் அதிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காகங்களும் குயில்களும் கிறீச்சிடும் வேளையில் மாரியம்மன் கோயிலிலிருந்து `செல்லாத்தா... செல்ல மாரியாத்தா...’ எனும் கந்தர்வக்குரலைக் கேட்டதும், சற்று நேரம் தூங்கலாம் என்றிருந்தவர்கள்கூட உற்சாகமாக எழுந்து அன்றைய தினத்தின் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு அம்மன் பாடல்களில் புகழ்க்கொடி நாட்டியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

எஸ்.ஆர்.ஈஸ்வரி  

ஆடி மாதத்தை 'அம்மன் மாதம்', 'அம்பாள் மாதம்' என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவார்கள். இந்த மாதத்தில் அம்மன் பக்தர்களுக்கு பக்திப் பரவசம் சேர்ப்பது அம்மன் பாடல்களே. அம்மன் பாடல்கள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது எல்.ஆர்.ஈஸ்வரியின் கணீரென்ற கந்தர்வக் குரல்தான். இன்றைய தலைமுறையினருக்கு பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரியை வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய பாடல்களைத் தெரியாமல், கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

அம்மன்

குறிப்பாக, கல்யாண வீடாக இருக்கட்டும், கோயில் திருவிழாக்களாக இருக்கட்டும்... எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் தவிர்க்க முடியாத ஒன்று. `பாசமலர்’ திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய `வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல் பட்டி, தொட்டிகள் என ஒலிக்காத இடம் இல்லை. அந்தப் பாடல் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. இன்றும் இந்தப் பாடல், திருமண நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத முக்கியப் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1961-ம் ஆண்டிலேயே இந்தப் பாடல் மூலாமாக தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டவர்.

எஸ்.ஆர்.ஈஸ்வரி 

அவர் பாடிய சாகாவரம் பெற்ற ஆயிரக்கணக்கான பாடல்கள், லட்சக்கணக்கான ரசிகர்களை அவருக்குத் தேடித்தந்தன. என்றாலும், 1985-ம் ஆண்டு அவரை வேறு ஒருவராக எல்லோருக்கும் அடையாளம் காட்டியது என்று சொல்லலாம். இந்த ஆண்டில்தான் அவர் பாடிய அம்மன் பாடல்கள் வெளிவரத் தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் அவர் சென்று பாடாத கோயில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, ஏராளமான கோயில் கச்சேரிகளில் அவரின் கணீர் குரல் ஒலித்தது. கிராமம், நகரம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அம்மன் கோயில்கள் இருக்கும் இடமெல்லாம் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள். திருவிழாக்களில் மைக்செட்காரர்கள், பக்தர்களை ஈர்க்கக் கையாளும் முதல் வழி, எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்களே. `அம்மன் பாடல்களின் நாயகி’ என்று புகழும் அளவுக்கு அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டன அந்தப் பாடல்கள். நேற்றும், இன்றும், என்றும் பரவமூட்டும் எல்.ஆர்.ஈஸ்வரியின் 10 பாடல்களின் தொகுப்பு... அம்மன் பக்தர்களுக்காக இங்கே...
 

செல்லாத்தா செல்ல மாரியாத்தா...

 


 

கற்பூர நாயகியே....


 

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரி...

 

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா...


 

மாரியம்மா எங்க மாரியம்மா...

 

தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...


 

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபரா சக்தி அவள்...

 


 

காலெமெனும் தேரில் ஏறி...


 

கருணை வடிவானவளே...

 


 

அம்பிக்கையைக் கொண்டாடுவோம்...

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close