Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக நன்மைக்காகவே பச்சைப் பட்டினி இருக்கும் சமயபுரம் மாரியம்மன்! #AadiSpecial

சமயபுரம் மாரியம்மன்

திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுல்ல, தன்னை நாடி வரும் மக்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக, சகல நோய்களையும்  அகற்றும் சர்வரோக நிவாரணியாகத் திகழ்கிறாள் சமயபுரம் மாரியம்மன்.

* ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி மக்களுக்கு, குறிப்பாக கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு, இவரே உற்ற தெய்வம். இரவு பகல் எந்நேரமும் பக்தர்கள் வந்துபோன வண்ணமே இருப்பார்கள். 

கண்ணப்புர நாயகி

*  சென்னை- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில்  இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் சென்று தரிசிக்கும் எளியதெய்வமாக இருக்கிறாள். 

* கிராமப்புற மக்களில் பலர் தங்களுடைய உறவுக்காரப் பெண்ணைப் போல் மாரியம்மாவை நினைப்பது வழக்கம். மாரி, மாரியாத்தாள், ஆத்தாள், ஆயா, மகமாயி, கண்ணபுர நாயகி, கண்ணம்மா என்று பல  பெயர்களில் அழைப்பார்கள். 

* தொடர்ந்து பல ஆண்டுகள் பக்திப் பரவசத்துடன் வந்து செல்லும் முரட்டு பக்தர்கள் அம்பாளை உரிமையோடு வார்த்தைகளால் வம்பு பண்ணி, சண்டையிட்டுக் கொண்டு வணங்கிச் செல்வதும் உண்டு.

சமயபுரம்

*  தீராத நாள்பட்ட நோயால் அவதிப்படும் ஏழைகளால் உயர்தரமான சிகிச்சைகளை அளிக்க முடியுமா? அவர்கள் நினைவுக்கு வருபவள் சமயபுரம் மாரியாத்தாள்தான். இந்தவேப்பிலைக்காரியின் வேப்பிலையும் மஞ்சள் குங்குமமும்தான் அவர்களுக்கு கண்கண்ட மருந்து. 
* கோயில் மண்டபங்களில் தங்க வைத்து  குணமானதும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள்.டாக்டர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறாள்.  

பூச்சொரிதல் விழா:

* ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கும். சமயபுரம்  மாரியம்மனுக்கு 'பூச்சொரிதல் விழா' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

* ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறுதொடங்கி, 28 நாட்களுக்கு உலக நன்மைக்காக அம்பாள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது வழக்கம். அந்த நாட்களில் சுவாமிக்கு  நைவேத்தியமாக துள்ளுமாவு, இளநீர், ஆரஞ்சுப் பழங்கள், திராட்சை, பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படுகின்றது. இந்தப் பூச்சொரிதல் விழாவுக்கு மூங்கில் தட்டுகளில் பூக்கள் வாங்கி அம்பாளுக்கு வழிபடுவது மிகவும் விசேஷம்.

*  திருவரங்கம் ரங்கநாதர் சமயபுரம் மாரியம்மனின் சகோதரர் அல்லவா ? அதனால், முதலில் அரங்கனிடம் இருந்து வரும் பூக்கள்தான் அம்பாளுக்கு சாத்தப்படுகின்றன. 

சமயபுரம் கோபுரம்


* சமயபுரம் அம்மன் ஆலயத்தில் தல விருட்சமாக வேப்பமரமிருக்கிறது இங்கே விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலில் இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று விநாயகர்கள் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

* சமயபுரம் மாரியம்மனுக்கு 'தாய் வீடு' என 'ஆதி சமயபுரம்' என்னும் இனாம் சமயபுரம்  ஊரைச் சொல்கிறார்கள். இங்குதான் மாரியம்மன் பிறந்ததாகவும், அதனால் இங்குள்ள அம்மன்,  சமயபுரம் மாரியம்மனைப் பார்த்த நிலையிலேயே இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஊருக்கு மாரியம்மன் வந்து செல்லும்  நிகழ்வும் நடைபெறுகிறது.

*  திருச்சி மாநகருக்குப் பெருமை சேர்க்கும் கோயில்களாக திருவானைக்காவல் சிவனுக்கும், சமயபுரம் மாரியம்மனுக்கும் திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளுக்கும், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கும், குமார வயலூர் முருகனுக்கும் உரிய தலங்களாகத் திகழ்கின்றன. 

* ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, மற்றும் ஞாயிறு நாட்களில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வந்து வழிபாடு செய்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close